சிறப்புச் செய்தி

இது என் அதிகார வரம்பில் இல்லை! டெல்லி போராட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் விளக்கம்!

12 hours ago 20 பார்வைகள்
இது என் அதிகார வரம்பில் இல்லை! டெல்லி போராட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் விளக்கம்!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி, டெல்லியில் கடந்த சில நாள்களாகக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகத் தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.

இந்த வார இறுதியில் டெல்லி நகரம் முழுவதும் பலத்த பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு, 45-க்கும் மேற்பட்ட மெட்ரோ நிலையங்கள் மூடப்பட்டன. மேலும், நகரின் எல்லைப் பகுதிகளில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதால் டெல்லி நகரம் ஒரு கோட்டை போல காட்சியளித்தது. கரப்பான் கட்சித் தலைவர்கள் மற்றும் முன்னாள் முதல்வர்கள் உள்பட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

இந்தச் சூழலில், டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்ற தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் 33-வது ஆண்டு விழா நிகழ்வில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் கலந்துகொண்டார். விழா நிறைவுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பல முக்கியக் குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டார்.

டெல்லியில் தொடரும் போராட்டங்கள் மற்றும் காவல்துறையினர் அமல்படுத்தியுள்ள கடும் கட்டுப்பாடுகள் குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த் பதிலளித்தார். அப்போது, "இது முற்றிலும் சட்டம்-ஒழுங்கு தொடர்பான விவகாரமாகும். இந்த விவகாரங்கள் எனது அதிகார வரம்பிற்கு உட்பட்டது அல்ல" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்