சிறப்புச் செய்தி

1 யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல்: தவெக அரசின் வெற்றி ஊழல் கொள்முதல் திட்டம் - இபிஎஸ்

14 hours ago 15 பார்வைகள்
1 யூனிட் மின்சாரம் ரூ.35-க்கு கொள்முதல்: தவெக அரசின் வெற்றி ஊழல் கொள்முதல் திட்டம் - இபிஎஸ்

சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* மின்சார கொள்முதல் குறித்து வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

* ரூ.20 வரை கொள்முதல் செய்யப்பட்ட 1 யூனிட் மின்சாரம் தற்போது ரூ.35-க்கு கொள்முதல் செய்தியால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

* கடந்த ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட கொள்முதல் ஒப்பந்தத்தை தவெக அரசு ரத்து செய்தது.

* நாட்டிலேயே எந்த மாநிலமும் செய்யாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரம் ரூ.35க்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

* செயற்கையாக மின் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உள்ளது தவெக அரசு

* மின்சாரத்துறைக்கு ஏற்கனவே ரூ.2,48,000 கோடி கடன் உள்ள நிலையில் 1 யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவதா?

* தவெக அரசின் இந்த திட்டத்தை வெற்றி ஊழல் கொள்முதல் திட்டம் என்று கூறலாம்.

* அதிக விலையில் மின் கொள்முதல் என ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு அதைவிட அதிக விலையில் கொள்முதல் செய்வதா?

* தவெக அரசின் இந்த மின் கொள்முதல் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்