சிறப்புச் செய்தி

நடுத்தர சக்தி அல்ல, மையத்தில் இருக்கும் சக்தி - இந்தியா குறித்து ஜெய்சங்கர் கருத்து!

13 hours ago 13 பார்வைகள்
நடுத்தர சக்தி அல்ல, மையத்தில் இருக்கும் சக்தி - இந்தியா குறித்து ஜெய்சங்கர் கருத்து!

இந்தியா ஒரு “நடுத்தர சக்தி” கொண்ட நாடு அல்ல, மாறாக உலக நாடுகளுக்கு அதிகாரமளிக்கும் சக்தி கொண்ட நாடு என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் உலகளாவிய அதிகாரக் கட்டமைப்பு தற்போது மாறி வருகிறது. ஒரு நாடு பிற நாடுகளை மிரட்டி பணிய வைக்கும் "இதைச் செய், இல்லையென்றால் விளைவுகளைச் சந்தி" என்ற காலம் முடிந்துவிட்டது. தற்போதைய உலகம் பரஸ்பர புரிதல் மற்றும் ஒருமித்த கருத்துகளின் அடிப்படையிலேயே இயங்குகிறது என தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற ப்ளூம்பெர்க் புதிய பொருளாதார மன்ற மாநாட்டில் பேசிய அவர், இந்த கருத்துகளை பகிர்ந்துள்ளார்.

மேலும் மாநாட்டில் பேசிய அவர்.,

ஒரு ‘நடுத்தர வல்லரசு’ என்பதைத் தாண்டி,மையத்தில் இருக்கும் வல்லரசாக நாம் இருக்கிறோம். உண்மையில் ஒரு நடுத்தர வல்லரசு என்பதை எது வரையறுக்கும்? பிரதமரின் வார்த்தைகளில் சொல்வதானால், அதிகாரம் அளிக்கும் சக்தி கொண்ட நாடுகள்... இந்தியா ஒரு நடுத்தர வல்லரசாக இருக்குமா?? இது ஒரு ஏற்றுக்கொள்ளக்கூடிய விளக்கம் அல்ல.

ஏனென்றால், நீங்கள் உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக இருந்து, ஏறக்குறைய 4 டிரில்லியன் டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டு, கண்முன்னே ஏராளமான வளர்ச்சி உங்களுக்கு முன்னால் இருக்கும்போது, ​​ இந்தியாவை 'நடுத்தர சக்தி' என்று அழைப்பது அதன் தகுதியைக் குறைத்து மதிப்பிடுவதாகும்.

இந்தியாவிற்கு இந்த வார்த்தை பொருந்துவது சற்று அசௌகரியமானது.

இனி நடுத்தர வல்லரசுகள் ஒவ்வொன்றும் தத்தமது சிந்தனையைப் பயன்படுத்தி, தத்தமது நலன்களை முன்னிறுத்தி, தத்தமது கொள்கைகளை வகுத்துக்கொண்டு, பின்னர் தங்களுக்குள் உடன்பாடுகளை எட்டிக்கொள்ளும்.

நாம் ஒரு புதிய உலகத்தை நோக்கி நகர்கிறோம். அங்கு, யார் என்ன பங்களிப்பை வழங்குகிறார்கள் என்பதைப் பொறுத்தே ஓரளவிற்குப் போட்டி இருக்கும். பின்னர், 'நீ இதைச் செய், நான் இதைச் செய்கிறேன், இதை நாம் ஒன்றாக வளர்ப்போம், ஒருவருக்கொருவர் இதைப் பரிமாறிக்கொள்வோம்' என்று தங்களுக்குள் பேசிக்கொள்வார்கள்.

அந்த மேசை நிச்சயம் இருக்கும். மக்கள் வெவ்வேறு வழிகளில், வெவ்வேறு பங்களிப்புகளுடன் அந்த மேசைக்கு வருவார்கள். அந்த மேசையைச் சுற்றியுள்ளவர்களின் நடத்தை மாறும். யார் எவ்வளவு சத்தமாகப் பேசுவார்கள், யார் யாருக்கு அருகில் அமர்வார்கள் என்பதும் மாறும்.

இந்த மாற்றச் செயல்முறை குறித்து நாம் அவநம்பிக்கையான கண்ணோட்டத்தைக் கொண்டிருக்கக் கூடாது. இந்த மாற்றச் செயல்முறை நடந்துகொண்டுதான் இருந்தது. நாம் எதிர்பார்க்காத திருப்பங்களை அது எடுத்துள்ளது,” என்று ஜெய்சங்கர் கூறினார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்