சிறப்புச் செய்தி

ராஞ்சி போட்டியில் தொடர்ச்சியாக 4 சதங்கள் விளாசிய ரிங்கு சிங் - பிசிசிஐ மீது ரசிகர்கள் விமர்சனம்

16 hours ago 23 பார்வைகள்
ராஞ்சி போட்டியில் தொடர்ச்சியாக 4 சதங்கள் விளாசிய ரிங்கு சிங் - பிசிசிஐ மீது ரசிகர்கள் விமர்சனம்

இந்தியாவில் முக்கியத்துவம் வாய்ந்த உள்ளூர் முதல் தர கிரிக்கெட் போட்டியாக ராஞ்சி டிரோபி பார்க்கப்படுகிறது.

இந்த ஆண்டிற்கான 92வது சீசன் இந்த மாதம் 11 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ராஞ்சி டிரோபி கிரிக்கெட் போட்டியில், ஜம்மு காஷ்மீர் அணி முதன்முதலாக சாம்பியன் பட்டம் வென்றது.

இந்த நிலையில் நடப்பாண்டில் நடைபெற்று வரும் ராஞ்சி தொடரில் உத்தரப் பிரதேச அணிக்காக ரிங்கு சிங் விளையாடி வருகிறார்.

இவர் பீகார் அணியை எதிர்த்து விளையாடிய முதல் போட்டியில், 112 ரன்கள் குவித்தார். இதையடுத்து கோவா அணிக்கு எதிரான போட்டியிலும், ஆட்டமிழக்காமல் 118 ரன்கள் குவித்தார்.

ரிங்கு சிங் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வரும் நிலையில், இந்திய அணியில் அவர் இடம்பெறாதது பிசிசிஐ மீது விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட பயனர்கள், “கடைசியாக நடந்த ஆறு ராஞ்சி போட்டியில், இரண்டு அரை சதங்கள் மற்றும் நான்கு சதங்களை ரிங்கு சிங் குவித்துள்ளார்” என பதிவிட்டுள்ளனர்.

மேலும், தொடர்சியாக தனது திறமைகளை நிரூபித்து வரும் ரிங்கு சிங்கிற்கு இந்திய அணியில் இடம் கிடைக்காதது அதிர்ச்சி அளிப்பதாக பதிவிட்டுள்ளார்கள்.

ரிங்கு சிங் சராசரியாக 60 ரன்கள் அடித்து வரும் நிலையில், இது வெறும் அதிர்ஷடம் அல்ல என்றும், சிறந்த திறமை என்றும் ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

பிசிசிஐ ரிங்கு சிங்கிற்கு அநீதி இழைத்துள்ளதாகவும், அரசியலை விட திறமைக்கு முன்னுரிமை கொடுங்கள் எனவும் பதிவிட்டுள்ளனர்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்