தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகத்தில் கட்டப்பட்டுள்ள மழைநீர் சேமிப்பு மாதிரி இல்லத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.
மழை நீர் சேமிப்பை மக்கள் இயக்கமாக மாற்றும் வகையில் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மழைநீர் சேமிப்பு விழிப்புண்வு குறித்த துளி இலச்சினையை அமைச்சர்கள் ஆதவ், ராஜ்மோகன், மரியவில்சன், குமார் உள்ளிட்டோருடன் இணைந்து முதலமைச்சர் ஜோசப் விஜய் வெளியிட்டார்.
மழை நீர் சேமிப்பு, மழை நீரை சேமித்து நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது குறித்த வீடியோவையும் முதலமைச்சர் வெளியிட்டார்.
அதில், மழைத்துளி ஒன்று மக்களிடம் பேசுவது போன்ற விழிப்புணர்வு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.