சிறப்புச் செய்தி

இஸ்ரேல் ஜனநாயக நாடாக இல்லாமல், இனவெறியுடன் செயல்படுகிறது: அரபு கட்சிகள் ஆட்சியமைக்க வீதிகளில் போராட்டம்

3 hours ago 12 பார்வைகள்
இஸ்ரேல் ஜனநாயக நாடாக இல்லாமல், இனவெறியுடன் செயல்படுகிறது: அரபு கட்சிகள் ஆட்சியமைக்க வீதிகளில் போராட்டம்

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 121 இடங்களுக்கு கடந்த அக்டோபர் 27 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் பெஞ்சமின் நேதன்யாகு தலையிலான லிகுட் கட்சிக்கு 53 இடங்களும், முன்னாள் ராணுவ தளபதியான காடி ஐசன்கோட் தலைமையிலான யஷார் கூட்டணி எதிர்க்கட்சிக்கு 48 இடங்களும் மற்றும் அரபு கட்சிகளுக்கு 19 இடங்களும் கிடைத்துள்ளன.

இதன் காரணமாக பெரும்பானைக்கு தேவையான 61 இடங்கள் யாருக்கும் கிடைக்காமல் உள்ளது.

இதையடுத்து அரபு கட்சிகளுடன் கூட்டணி அமைக்கமாட்டோம் என நேதன்யாகு கூறி வருவதால், இஸ்ரேலில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், பிரதமர் நேதன்யாகு பதவி விலக கோரியும், 19 இடங்களை பெற்றுள்ள அரபு கட்சியுடன் இணைந்து எதிர்க்கட்சி ஆட்சி அமைக்குமாறு போராட்டம் நடந்து வருகிறது.

இஸ்ரேலில் போராட்டக்காரர்கள் நகரம் முழுவதும் வீதிகளில் பேரணியாக சென்று, சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், ‘அரபிகளும் யூதர்களும் ஒன்று சேர்ந்தால் மட்டுமே நாம் வெல்வோம்’ என்ற பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்ரேல் ஒரு ஜனநாயக நாடாக இல்லாமல் உள்ளதாகவும், இனவெறி மனப்பான்மையுடன் செயல்பட்டு வரும் அரசாக இருப்பதாகவும் கூறி ஆர்ப்பாட்டாக்காரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதேபோன்று ஹெர்சிலியாவில் உள்ள யஷார் கட்சி தலைவர் காடி ஐசன்கோட்டின் வீட்டின் முன்பும் போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், நேதன்யாகு மீண்டும் ஆட்சியமைப்பதை தடுக்கும் வகையில், அரபு கட்சிகளுடன் இணைந்து பதவி ஏற்குமாறு எதிர்க்கட்சி தலைவர் காடி ஐசன்கோட்டிற்கு கோரிக்கை வைத்தனர்.

இஸ்ரேலில், ‘கூட்டாண்மை இல்லாமல் மாற்றம் இல்லை’ என்று முழக்கமிட்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், அரபு கட்சிகளுடன் ஒத்துழைக்குமாறு ஐசன் கோட்டின் வீட்டின் முன்பு முழக்கமிட்டனர்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்