பாஜகவை சேர்ந்த ஜார்க்கண்டின் முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அர்ஜுன் முண்டா உடைய தாய் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அர்ஜுன் முண்டா அவருக்கு தைரியம் அளிக்கவும், மகிழ்ச்சி கொள்ள செய்யவும் அவர் அருகில் அமர்ந்து புல்லாங்குழல் வாசித்துள்ளார்.
அந்த இசையை கேட்டதும், தாயின் முகத்தில் புன்னகை மலர்ந்தது.
இந்த தருணத்தை அர்ஜுன் முண்டா தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார். இது பலரை நெகிழ வைக்கும் வண்ணம் அமைந்துள்ளது.
அர்ஜுன் முண்டா தனது பதிவில், "என் வாழ்வில் கிடைத்த மிகவும் விலைமதிப்பற்ற வரம் அம்மா. அவரது அன்புதான் என் மிகப்பெரிய பலம். அவரது ஆசீர்வாதங்கள்தான் என் ஆதரவு. அவரது வாழ்க்கைதான் எனக்கு மிகப்பெரிய உத்வேகம்," என்று அவர் தெரிவித்துள்ளார்.