சிறப்புச் செய்தி

ஆந்திராவில் பள்ளி தாக்குதலில் பாதிக்கப்படட் சிறுமியின் உடல் நலன் குறித்து பகிர்ந்த அமைச்சர்

1 hour ago 9 பார்வைகள்
ஆந்திராவில் பள்ளி தாக்குதலில் பாதிக்கப்படட் சிறுமியின் உடல் நலன் குறித்து பகிர்ந்த அமைச்சர்

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம் ராப்தாடு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில், 10-ஆம் வகுப்பு மாணவி மீது வாலிபர் ஒருவர் மின்சார ரம்பத்தால் (Chainsaw) கொடூரத் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஆந்திர மாநில மனிதவள மேம்பாடு மற்றும் கல்வித்துறை அமைச்சரான நாரா லோகேஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் பாதிக்ப்பட்ட மாணவியின் உடல்நலம் குறித்த செய்தியை பகிர்ந்துள்ளார்

கல்வி மற்றும் பாதுகாப்பிற்கான ஒரு பள்ளி வகுப்பறைக்குள் சிறுமி மீது நடத்தப்பட்ட இந்த கொடூரமான, மனிதாபிமானமற்ற தாக்குதல் தன்னை பெரும் அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்கியதாகக் கூறி கடும் கண்டனம் தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான இதுபோன்ற கொடூரமான குற்றங்களை ஆந்திர அரசு ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாது. குற்றவாளி மீது உடனடியாகவும் கடுமையான முறையிலும் காவல்துறை நடவடிக்கை எடுத்து, அவனுக்கு சட்டப்படி மிகக் கடுமையான தண்டனை பெற்றுத்தரப்படும் என்று உறுதியளித்தார்.

இச்சம்பவத்தால் பள்ளியில் உள்ள சக மாணவிகள் மற்றும் பெற்றோருக்கு ஏற்பட்டுள்ள அதிர்ச்சியைத் தணிக்க, பாதிக்கப்பட்ட வகுப்பறையைச் சேர்ந்த 32 மாணவர்கள் மற்றும் 8, 9, 10-ஆம் வகுப்பு படிக்கும் மாணவிகளின் வீடுகளுக்கு 20 மனநல ஆலோசகர்களை அனுப்பி அவர்களுக்குத் தேவையான உணர்வுபூர்வமான ஆதரவும், ஆலோசனைகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவியின் உடல் முன்னேற்றம் குறித்து தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளதாவது

ஆந்திரப் பிரதேசத்தின் ரப்தாடுவில் கொடூரமாகத் தாக்கப்பட்ட சிறுமிக்கு செய்யப்பட்ட எலும்பியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் இரண்டும் வெற்றிகரமாக முடிந்துள்ளதாக பெங்களூரு மணிபால் மருத்துவமனை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். தற்போது அவர் தீவிர கண்காணிப்பிற்காக குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு (PICU) மாற்றப்பட்டுள்ளார்.

அவரது உயிரைக் காப்பாற்ற அயராது உழைத்த மருத்துவக் குழுவினருக்கு எனது மனமார்ந்த நன்றிகள். எங்கள் அரசு அக்குடும்பத்தினருடன் உறுதுணையாக நிற்கிறது. மேலும், அக்குழந்தை குணமடையும் காலம் முழுவதும் அவருக்குச் சிறந்த மருத்துவ சிகிச்சையும் தேவையான அனைத்து உதவிகளும் கிடைப்பதை உறுதி செய்யும். இன்று பிற்பகல் மருத்துவமனைக்கு நேரில் சென்று முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும், மருத்துவர்களிடம் பேசவும் உள்ளேன்.

என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்