சிறப்புச் செய்தி

த.வெ.க. ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு- டிடிவி தினகரன்

10 hours ago 18 பார்வைகள்
த.வெ.க. ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு- டிடிவி தினகரன்

சென்னை கிண்டியில் உள்ள லோக் பவனுக்கு வருகை தந்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், ஆளுநர் அர்லேகரை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன் கூறியதாவது:-

ஆளுநரிடம் புகார் அளிக்கவில்லை, தீபாவளி வாழ்த்துகளை தெரிவிக்க சந்தேன். ஆளுநராக அர்லேகர் பதவியேற்ற பிறகு சந்திக்காததால் மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.

ஜனநாயகன் பட தயாரிப்பாளர் போன்ற ஒருவரிடம் தமிழ்நாட்டை கொடுத்துவிட்டு தூங்க நினைக்கிறார்கள். எல்லாவற்றிலும் ஆணவத்துடன் இருப்பது போல் தொழில் முதலீட்டாளர்களிடமும் ஆணவத்துடன் இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழ்நாட்டில் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

மாற்றத்தை தருவதாக கூறி தமிழ்நாடே வீழ்ச்சியே நோக்கி போகிற மாற்றத்தைதான் கொடுத்து இருக்கிறார்கள். போதை மருந்து வியாபாரத்தை த.வெ.க.வினரே செய்கிறார்கள். த.வெ.க. ஆட்சியில் விண்ணை முட்டும் விலைவாசி உயர்ந்துள்ளது. சினிமாவில் மிரட்டுவதைப்போல மிரட்டிப் பார்க்கிறார்கள். ஆட்சியை விமர்சிப்பவர்களை த.வெ.க.வினர் மிரட்டிப் பார்க்கின்றனர். தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு செல்கின்றன என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினாார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்