சிறப்புச் செய்தி

ஒரு எம்.எல்.ஏ. சீட்டுக்காக பிழைப்புவாத அரசியல் செய்கிறார் சீமான் - அமைச்சர் வன்னி அரசு

8 hours ago 19 பார்வைகள்
ஒரு எம்.எல்.ஏ. சீட்டுக்காக பிழைப்புவாத அரசியல் செய்கிறார் சீமான் - அமைச்சர் வன்னி அரசு

தீர்த்தகாடு பகுதியில் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வரும் மக்களுக்கு, மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் வன்னி அரசு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;

தமிழ்நாடு முழுவதும் பட்டா வழங்கப்பட்டு வருகிறது. தீர்த்தக்காட்டில் 40 ஆண்டு கால போராட்டத்திற்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற பிரச்சினைகள் உள்ளது. ரசீது இருக்கிறது கிணற்றை காணவில்லை என்பது போல பட்டா இருக்கிறது, ஆனால் இடத்தை காணவில்லை.

80 ஆண்டுகால சுதந்திரத்திற்கு பின்னரும் வீட்டு மனை பட்டா இல்லாமல் பூர்வ குடிகள் இருப்பது மண்ணின் அவமானம்.

மக்களுக்கு பட்டா வழங்கியதன் மூலம் தமிழ்நாட்டில் நல்லாட்சி நடைபெறுகிறது என்பதற்கு ஒரு சாட்சி தான் இது. சட்டம், ஒழுங்கு பிரச்சினை அனைத்து கால கட்டத்திலும் உள்ளது.

மக்களுக்காக கடந்த 5 ஆண்டுகளில் போராட்டம் நடத்திய இயக்கம் விடுதலை சிறுத்தைகள் இயக்கம் தான். கவின் படுகொலை விவகாரத்தில் எங்கள் கருத்துகளை நேரடியாக பேசுகிறோம். போராட்டங்களை நடத்துகிறோம்.

கடந்த காலங்களில் நடக்காத செயல் திட்டங்களை செயல்படுத்துகிறோம். மாணவர்கள் சரியாக முடிவெட்ட வில்லை என்றால் மொட்டை அடிக்க வேண்டும் என அமைச்சர் ஜெகதீஸ்வரி ஒரு தாயாக கூறி உள்ளார். அந்த விஷயத்தை அப்படித்தான் பார்க்க வேண்டும்.

நூற்றாண்டு சமூக கட்டமைப்பு சாதியை, சனா தனத்தை வலிமையாக்கும் அரசு பா.ஜ.க. அரசு. அதனை உடைத்து போராடுவது சாதாரணமானது அல்ல, எனவே சாதி பிரச்சனை தற்போது இருக்கிறதா? என்று ஒப்பிட்டு பார்க்க வேண்டியதில்லை.

பா.ஜ.க. அரசு பாட சொன்ன வந்தே மாதரம் பாடலை முதலில் பாடாமல் தமிழ்த்தாய் வாழ்த்தை பாட வேண்டும் என தீர்மானம் ஏற்றியது த.வெ.க. அரசு. மற்ற மாநிலங்கள் யோசித்த போது த.வெ.க. அரசு தீர்மானம் நிறைவேற்றி செய்து காட்டியது.

அதேபோல் வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம் ஆகிய வற்றைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது தமிழ்நாடு அரசு. எனவே தமிழ்நாடு அரசு பா.ஜ.க.வுடன் சேர்ந்து செயல்படுவது என்பது அவதூறு ஆகும்.

மாணவர்கள் விடுதியில் கோழிக்கறி போடுவது போல் மாட்டு கறி போட ணும் என்று கோரிக்கை வைத்தனர். அதனை முதல்-அமைச்சரிடம் எடுத்துச் செல்வேன் என்றுதான் சொன்னேன். மாட்டுக்கறி போடணும் என சொல்லவில்லை.

இதனை சில கும்பல் திரித்து விஷம பிரசாரம் செய்கின்றனர். சீமானை போன்ற பிழைப்புவாத அரசியல் செய்பவர்கள் யாரும் இல்லை. தி.மு.க., அ.தி.மு.க. விற்கு எதிராக கட்சியை தொடங்கினார். திராவிட கட்சிகளை இழிவாக பேசிவிட்டு ஒரு எம்.எல்.ஏ. சீட்டுக்காக தற்போது மாறுகிறார்.

திராவிட பிரியாணிக்காக கையேந்தி நிற்கும் சீமான் பிழைப்புவாத அரசியலுக்காக செயல்படுகிறார்.” என தெரிவித்தார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்