தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

நடிகர் சூரியின் ஹோட்டலில் திடீர் சோதனை.. மதுரையில் பரபரப்பு!

நகைச்சுவை நடிகர் சூரி மற்றும் அவரது சகோதரருக்கு சொந்தமாக மதுரை தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ரிசர்வ்லைன் சந்திப்பு, ஊமச்சிக்குளம், நரிமேடு, ஒத்தக்கடை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ’அம்மன்' என்ற பெயரில் உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

சமீப காலத்தில் துவக்கப்பட்ட இந்த உணவகங்களில் வாடிக்கையாளரின் வருகை அதிகரிக்க தொடங்கியதால் எப்போதும் உணவகங்களில் கூட்டம் நிரம்பி காணப்படும்.

இந்த நிலையில் நடிகர் சூரிக்கு சொந்தமான உணவகங்களில் உணவுப் பொருட்களை தயாரிக்க பயன்படும் அரிசி, எண்ணெய், மாவு உள்ளிட்ட பொருட்களுக்கு உரிய ஆவணமின்றி மொத்தமாக வாங்குவதாக வணிக வரித்துறையினருக்கு ரகசிய புகார் வந்துள்ளது.
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel