சிம்பு நடிப்பில் உருவாகி வரும் பத்து தல படத்தின் தியேட்டர் ரிலீஸுக்கு பிந்தைய வெளியீட்டு உரிமையை பிரபல ஓடிடி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
மாநாடு, வெந்து தணிந்தது காடு ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து, நடிகர் சிம்பு தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் 'பத்து தல' திரைப்படத்தில் நடித்து வருகிறார். கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஆன 'மஃப்ட்டி' படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகிறது.
நிழல் உலக தாதாவை தேடிப்போகும் ரகசிய போலிஸ் பற்றிய கதையாக வெளியான மஃப்ட்டி, சிவராஜ்குமார் நடித்த படங்களில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையைப் பெற்றது. இதற்கிடையே தமிழில் உருவாகும் பத்து தல படத்தில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கலையரசன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இயக்குனர் கௌதம் மேனன் வில்லனாக நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பத்து தல படத்தின் தியேட்டர் ரிலீஸுக்கு பிந்தைய ஓடிடி வெளியீடு உரிமையை அமேசான் ப்ரைம் நிறுவனம் பெற்றிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மிகப்பெரும் தொகைக்கு இந்த டீல் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் வெளியாகி மெகா ஹிட்டான பொன்னியின் செல்வன், சீதா ராமம், கே.ஜி.எஃப். 2 உள்ளிட்ட படங்களை அமேசான் ப்ரைம் ஓடிடி நிறுவனம் கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது. அடுத்து வெளியாகவுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்துடைய ஓடிடி ரிலீஸையும் அமேசான் ப்ரைம் வெளியிடுகிறது.
சிறப்புச் செய்தி
சிம்பு நடிக்கும் பத்து தல படத்தின் ஓ.டி.டி உரிமையை வாங்கியது அமேசான்!
Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்!
முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்
தொடர்புடைய செய்திகள்
பா.ஜ.க. - வின் அரசியல் நோக்கங்களுக்காக ஆளுநர் மாளிகை பயன்படுத்தப்பட...
1 minute ago
இஸ்ரோ தனியார்மயமாகாது; 2029-க்குள் இந்தியாவில் நான்கு ஏவுதளங்கள் செ...
32 minutes ago
கேரள தேர்வாணைய தலைவரை பதவி நீக்கம் செய்ய குடியரசுத் தலைவருக்கு அர்ல...
1 hour ago