கொல்கத்தா, கடந்த 2021 பிப்ரவரி மாதம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற யூசுப் பதான், அதன் பின்னர் அரசியலில் கவனம் செலுத்த தொடங்கினார். நாடாளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் மேற்கு வங்காளத்தின் பராம்பூர் தொகுதியில் யூசுப் பதான் போட்டியிட்டார்.அதே தொகுதியில் பதானை எதிர்த்து காங்கிரஸ் கட்சி சார்பில் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி போட்டியிட்டார்.
மேலும் பா.ஜ.க. சார்பில் நிர்மல் குமார் சஹா போட்டியிட்டார். இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பராம்பூர் தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் யூசுப் பதான் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்களை விட அதிக வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். கிரிக்கெட்டில் பல சாதனைகள் படைத்து அசத்திய அவர், தற்போது அரசியலிலும் வெற்றிப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
சிறப்புச் செய்தி
அரசியலிலும் சாதித்த கிரிக்கெட் வீரர் யூசுப் பதான்!
Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்!
முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்
தொடர்புடைய செய்திகள்
பட்டினப்பாக்க இடத்தேர்வுக்கான ஆய்வு விவரங்கள் இல்லை என பதிலளித்த தவ...
6 hours ago
உலக அமைதிக்கு இந்தியாவின் ஆதரவு தொடரும்- போலந்து பிரதமருடன் மோடி பே...
7 hours ago
முன்பதிவில் ரூ.5.33 கோடி வசூலித்த ‘ராமாயணா’ - 1.28 லட்சம் டிக்கெட்ட...
7 hours ago