தவெக கொடி - பகுஜன் சமாஜ் எதிர்ப்பு..!
விஜய் கட்சிக்கொடிக்கு வந்த சிக்கல்... நீதிமன்றம் வரை போவோம் என்று மிரட்டிய வடஇந்திய கட்சி!!
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கு பிரபல அரசியல் கட்சி ஒன்று எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தில் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய், பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்து வைத்தார். சிவப்பு, மஞ்சள் நிற கொடியில் இரண்டு போர் யானைகளுக்கு நடுவே வாகை இடம் பெற்றுள்ளது.
தொடர்ந்து, கட்சியின் அலுவலகத்தில் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், ‘தமிழன் கொடி பறக்குது, தலைவன் யுகம் பிறக்குது’ எனத் தொடங்கும் கட்சியின் கொள்கை பாடலை வெளியிட்டார்.
பிறகு மேடையில் அவர் பேசியதாவது:- நம் கட்சி கொடிக்கு பின்னணியாக ஒரு வரலாற்றுக் குறிப்பு உள்ளது. அதை பின்னர் தெரிவிக்கிறேன். கொடியில் இடம்பெற்றுள்ள யானை மற்றும் வாகை மலர் பற்றிய விளக்கத்தை முதல் மாநில மாநாட்டில் தெரிவிக்கிறேன். முதல் மாநில மாநாடு எப்போது நடைபெறும் என்பது விரைவில் அறிவிக்கப்படும், எனக் கூறினார். இதனால், கட்சி நிர்வாகிகள் மற்றும் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
இந்த நிலையில், விஜய்யின் கட்சி கொடிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொடியில் இடம்பெற்றுள்ள யானை படத்தை நீக்க வேண்டும் என்று உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
தங்கள் சின்னமான யானையைப் பயன்படுத்துவது தவறு என்றும், யானை சின்னத்தை நீக்கவில்லை எனில், சட்டரீதியாக நடவடிக்கை எடுப்போம் என்று அவர் கூறியுள்ளனர். இது தமிழக வெற்றிக் கழகத்தினருக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

Tags / குறிச்சொற்கள்:
TVK
TVK FLAG
TVK VIJAY
VIJAY
ACTOR VIJAY
தமிழக வெற்றிக் கழகம்
கட்சி கொடி
யானை
பகுஜன் சமாஜ் கட்சி
விஜய்
BSP
BSP FLAG
ELEPHANT