சிறப்புச் செய்தி

ஆசிய பாராலிம்பிக்: 15 பதக்கங்களை வென்ற தமிழக வீரர்- வீராங்கனைகள்

42 minutes ago 8 பார்வைகள்
ஆசிய பாராலிம்பிக்: 15 பதக்கங்களை வென்ற தமிழக வீரர்- வீராங்கனைகள்

ஜப்பானில் நடைபெற்ற பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து 13 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். பேட்மிண்டன் போட்டியில் 9 பேரும், டேபிள் டென்னிஸ் போட்டியில் 2 பேரும், தடகளம் மற்றும் வலுதூக்குத லில் தலா ஒருவரும் கலந்து கொண்டனர்.

இதில், 9 வீரர், வீராங்கனைகள் 15 பதக்கங்களை வென்று சாதித்தனர். 3 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கல பதக்கத்தை தமிழக வீரர், வீராங்கனைகள் கைப்பற்றினார்கள்.

தடகளத்தில் தர்மராஜ் சோலைராஜ் தங்கம் வென்றார். நீளம் தாண்டுதல் டி64 பிரிவில் அவர் முதல் இடத்தை பிடித்து தமிழகத்திற்கு பெருமை சேர்த்தார்.

பேட்மிண்டனில் துளசி மதி முருகேசன் 3 பதக்கங்களை வென்றார். அவர் பெண்கள் இரட்டையர் பிரிவில் (எஸ்.எல்.3-எஸ்.யு.5) தங்கமும், ஒற்றையர் பிரிவில் வெள்ளியும் (எஸ்.யு.5) கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளியும் (எஸ்.எல்.3-எஸ்.யு.5) பெற்றார்.

பேட்மிண்டன் ஒற்றையர் எஸ்.எல்.4 பிரிவில் நவீன் சிவக்குமார் தங்கம் வென்றார். இரட்டையர் பிரிவில் (எஸ்.எல்.3-எஸ்.யு.5) வெண்கல பதக்கம் வென்றார். அவருக்கு மொத்தம் 2 பதக்கம் கிடைத்தது.

இதே போல பேட்மிண்டனில் நித்யஸ்ரீ சுமதி சிவனும் 2 பதக்கம் பெற்றார். அவர் ஒற்றையர் பிரிவில் (எஸ்.எச்.6) வெள்ளியும், கலப்பு இரட்டையர் பிரிவில் (எஸ்.எச்.6) வெண்கலமும் பெற்றார்.

மணிஷா ராம்தாசும் 2 வெண்கல பதக்கம் பெற்றார். அவர் பெண்கள் ஒற்றையர் பிரிவிலும் (எஸ்.யு.5), கலப்பு இரட்டையர் பிரிவிலும் (எஸ்.எல்.3-எஸ்.யு.5) பதக்கத்தை கைப்பற்றினார்.

பேட்மிண்டன் வீரர் சிவராஜன் சோலைமலை கலப்பு இரட்டையர் பிரிவில் (எஸ்.எச்.6) வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

டேபிள் டென்னீஸ் வீரரான மதனும் 2 பதக்கம் பெற்றார். அவர் ஒற்றையர் கிளாஸ் 1 பிரிவிலும், இரட்டையர் கிளாஸ் எம்.டி.8 பிரிவிலும் வெண்கலம் வென்றார்.

வலுத்தூக்கும் போட்டியில் பெண்களுக்கான 67 கிலோவுக்கும் மேற்பட்ட பிரிவில் கஸ்தூரி ராஜா மணி வெள்ளிப்பதக்கம் பெற்றார். டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவு கிளாஸ் 9 பிரிவில் பேபி சகானா ரவி வெண்கல பதக்கம் பெற்றார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்