சிவகார்த்திகேயனின் அமரன் டிச.5-ல் ஓடிடியில் ரிலீஸ்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘அமரன்’ திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் ‘அமரன்’. இந்தப் படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த அக்டோபர் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவானதாக கூறப்படும் இந்தப் படம் உலக அளவில் ரூ.250 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியுள்ளது.
மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதாரஜனின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் இன்றும் ஹவுஸ் ஃபுல்லாக திரையரங்குகளில் திரையிடப்படுகிறது. மக்களிடையே பெற்ற வரவேற்பால் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் டிசம்பர் 5-ம் தேதி இந்தப் படம் நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Tags / குறிச்சொற்கள்:
சிவகார்த்திகேயன்
அமரன்
ராஜ்கமல்
சாய் பல்லவி
ஓடிடி
சினிமா
SIVA KARTHIKEYAN
AMARAN
SAI PALLAVI
CINEMA
OTT