தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

இன்றைய ஐ.பி.எல். தொடரில் இரண்டு லீக் ஆட்டங்கள்... டெல்லி- கொல்கத்தா, மும்பை - பஞ்சாப் அணிகள் மோதல்..!

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. சார்ஜா மைதானத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணி 8 வெற்றி இரண்டு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 2-வது இடத்திலும், இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா அணி 4 வெற்றி 6 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திலும் உள்ளது.

இதேபோல் மற்றொரு லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி அபுதாபி மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel