வீடியோ: '100 நாள் ஆட்சி ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி' - முதலமைச்சர் விஜய்
தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்களான நிலையில் 'ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி' என பதிவிட்டு முதலமைச்சர் விஜய் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் 14-வது முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் மே 10-ந்தேதி பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர்.
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்றதும் குடும்பங்களுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கல், பெண்களின் பாதுகாப்பிற்கான சிறப்புப் பிரிவு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுத்தல் தொடர்பான முக்கிய 3 முக்கிய திட்டங்களை அமல்படுத்தும் கோப்புகளில் முதலமைச்சர் விஜய் கையெழுத்திட்டார்.
இந்நிலையில், தவெக அரசு பொறுப்பேற்று 100 நாட்களான நிலையில் முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில் பதிவில், 'ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி' என குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தவெக அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில் செய்யப்பட்ட திட்டங்களின் பட்டியலை குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அதில், சிங்கப்பெண் அதிரடிப்படை, போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்டவற்றை பட்டியலிட்டு அவர் பதிவிட்டுள்ளார்.