தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

ரூ.400 கோடியில் சென்னையில் முக்கோண வழித்தட சாலை: அமைச்சர் ஆதவ் அர்ஜூனா

தமிழக சட்டசபையில் நெடுஞ்சாலை துறைக்கான மானியக் கோரிக்கை மீதான பதிலுரையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா கூறியதாவது:

நம்ம சாலை செயலியை உள்ளடக்கிய சீரான சாலைகள் திட்டத்திற்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு

மாவட்ட சாலைகள் மீது கவனம் செலுத்தப்படும்.

சென்னை- கோவை - தூத்துக்குடியை இணைக்கும் தொழில் தட விரைவு சாலை உருவாக்கப்படும்.

தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

ரூ.500 கோடியில் சாலை பாதுகாப்பு கண்காணிப்பு குழு செயல்படுத்தப்படும்.

கடல்வழி போக்குவரத்து மும்பையில் இருப்பது போல் செயல்படுத்தப்படும்.

சென்னை-மாமல்லபுரம்-புதுச்சேரி வரை கடல்வழி உயர்மட்ட சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை-புதுவை இடையே படகு போக்குவரத்து

சாலை விபத்துகளைத் தடுக்க அடுத்த ஆண்டு முதல் சாலை விதிகள் மேலும் கடுமையாக்கப்படும்.

நெடுஞ்சாலைகளில் பேட்ச் ஒர்க்கிற்கு மட்டும் அதிக செலவு செய்யப்படுகிறது. அதில் அதிக ஊழலும் நடந்துள்ளது.

ரூ. 400 கோடியில் சென்னையில் முக்கோண வழித்தட சாலை

45,000 கிலோ மீட்டர் சாலைகள் இருவழிப் பாதையாக மாற்றப்படும்.

வடசென்னையில் பெருகி வரும் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு, வியாசர்பாடியில் உள்ள ரெயில்வே மேம்பாலம் நீட்டிக்கப்படும்.

பாம்பன் டூ அக்னி தீர்த்தம் வரை உள்நாட்டு பயணிகள் போக்குவரத்து சேவை

நாகை - காங்கேசன்துரை இடையிலான படகு போக்குவரத்து விரிவுப்படுத்தப்படும் என தெரிவித்தார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel