பால் கொள்முதல் விலை ரூ.3 உயர்வு போதுமானதல்ல: லிட்டருக்கு குறைந்தது 7 ரூபாயாவது உயர்த்த வேண்டும்!- அன்புமணி
ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது என்றாலும் இது போதுமானது அல்ல என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் இன்று முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ், ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ.38-ல் இருந்து ரூ.41 ஆக உயர்த்தப்படும் என்று அறிவித்தார்.
இதுதொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் மூலம் கொள்முதல் செய்யப்படும் பாலின் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தப்பட்டிருக்கிறது. பாலுக்கு இதுவரை வழங்கப்பட்டு வந்த கொள்முதல் விலை 35 ரூபாயிலிருந்து 36 ரூபாயாகவும், ஊக்கத்தொகை ரூ.3-லிருந்து ரூ.5 ஆகவும் உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்திருக்கிறார். பால் கொள்முதல் விலை உயர்வு வரவேற்கத்தக்கது என்றாலும் இது போதுமானது அல்ல.
தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை கடந்த 4 ஆண்டுகளாக உயர்த்தப்படாததாலும், தனியார் நிறுவனங்கள் ஆவின் கொள்முதல் விலையை விட லிட்டருக்கு ரூ.12 வரை கூடுதலாக வழங்குவதாலும் ஆவின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு குறைந்தது ரூ.10 உயர்த்தி வழங்க வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வந்தது. அந்த அளவுக்கு உயர்த்த முடியாவிட்டாலும் குறைந்தது லிட்டருக்கு ரூ.7 அளவுக்காவது உயர்த்த அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel