சிறப்புச் செய்தி

26 வயதில் இத்தனை கின்னஸ் சாதனைகளா!.. கால்பந்து உலகின் Goal machine - யார் இந்த எர்லிங் ஹாலண்ட்?

1 month ago 135 பார்வைகள்
26 வயதில் இத்தனை கின்னஸ் சாதனைகளா!.. கால்பந்து உலகின் Goal machine - யார் இந்த  எர்லிங் ஹாலண்ட்?

கால்பந்து உலகில் மெஸ்ஸி, ரோனால்டோ போன்ற ஜாம்பவான்களின் காலம் மாறி இளம் வீரர்கள் கவனம் பெறத் தொடங்கியுள்ளனர். நடந்து முடிந் பிஃபா உலகக் கோப்பை தொடரில் பல இளம் வீரர்களின் எழுச்சி ஏற்பட்டது.

இந்த் சூழலில் 26 வயதியே ஆன இளம் கால்பந்து வீரர் எர்லிங் ஹாலண்ட் உலக சாதனை புத்தகத்தில் தனக்கென தனியிடம் பிடித்துள்ளார்.

மான்செஸ்டர் சிட்டி கால்பந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான இவர் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் தொடர்ச்சியாக பல கோல்களை அடித்து 4 கின்னஸ் உலக சாதனைகளை படைத்துள்ளார்.

*பிரீமியர் லீக்கில் வெறும் 111 போட்டிகளில் 100 கோல்களை எட்டி சாதனை படைத்தார்.

*2022-23 ஒரே சீசனில் 36 கோல்களை அடித்ததன் மூலம் ஒரே பிரீமியர் லீக் சீசனில் அதிக கோல்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்தார்.

*UEFA நேஷன்ஸ் லீக் தொடரின் வரலாற்றிலேயே அதிகபட்சமாக 19 கோல்களை சேர்த்து முதலிடம் பிடித்தார்.

*அதே UEFA தொடரில் ஆர்பி லீப்சிக் அணிக்கு எதிரான ஒரே போட்டியில் 5 கோல்களை அடித்து லியோனல் மெஸ்ஸி மற்றும் லூயிஸ் அட்ரியானோ ஆகியோரின் உலக சாதனையை சமன் செய்தார்.

வெவ்வேறு காலகட்டத்தில் அவர் படைத்த இந்த 4 சாதனைகளுக்குமான சான்றிதழ்களை, மான்செஸ்டர் நகரில்  உள்ள எதிஹாட் மைதானத்தில் வைத்து கின்னஸ் அமைப்பு அவர் வசம் வழங்கியுள்ளது.

ஜூலை 21, 2000 அன்று இங்கிலாந்தின் லீட்ஸ் நகரில் பிறந்தார் எர்லிங் ஹாலண்ட். நார்வேயை பூர்வீகமாக கொண்ட இவரது தந்தை அல்பி ஹாலண்ட் முன்னாள் கால்பந்து வீரர் ஆவார்.

இங்கிலாந்தின் மான்செஸ்டர் சிட்டி அணிக்காகவும், நார்வே தேசிய அணிக்காகவும் ஹாலண்ட்விளையாடி வருகிறார். கால்பந்து உலகில் இவருக்கு "கோல் மெஷின்" என்றும் "வைக்கிங்" என்றும் பெயருண்டு.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்