5 ஆண்டு உழைப்பு...வெறும் ரூ.19,000 முதலீடு: 30 ஆயிரம் மடங்கு லாபம் கொடுத்த படம் எது தெரியுமா?
தயாரிப்பிற்காக இணையத்தில் பெரும் கிண்டல்களுக்கு உள்ளான சீன அனிமேஷன் திரைப்படம் ‘நியு லாய்’ அதன் தயாரிப்பில் இருந்து 30 மடங்கு லாபம் பெற்றுத் தந்துள்ளது.
வெறும் ரூ.19 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் உருவான இந்த அனிமேஷன் படம் ரூ.60 கோடிக்கும் அதிகமாக வசூலித்து 666 மடங்கு லாபம் கொடுத்த அப்செசன் (Obsession) படத்தின் சாதனையை முறியடித்துள்ளது.
சின் யுமெங் மற்றும் அவரது தாயார் சன் லிஃபாங் ஆகிய இருவரும் இணைந்து 5 ஆண்டுகள் உழைத்து இந்த 86 நிமிடப் படத்தை வீட்டிலேயே உருவாக்கியுள்ளனர்.
படத்திற்கு எந்தவித டீசர், ட்ரெய்லர் அல்லது பெரிய விளம்பர போஸ்டர்கள் கூட கிடையாது. மை முறையில் வரையப்பட்ட ஒரு எளிய போஸ்டர் மட்டுமே பயன்படுத்தப்பட்டது.
ஆகஸ்ட் 5 அன்று வெளியான இந்தத் திரைப்படத்தை முதல் 10 நாட்களில் வெறும் 300 பேர் மட்டுமே பார்த்தனர். இதனால் வெறும் ரூ.1.04 லட்சம் (7,700 யுவான்) மட்டுமே வசூலானது.
இப்படத்தின் மிக மோசமான அனிமேஷன் தரம், வித்தியாசமான குரல் பதிவுகள் காரணமாக சமூக வலைத்தளங்களில் மீம்களாகவும், “2026-ன் மிக மோசமான படம்” என்றும் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டது.
இந்த நெகட்டிவ் விமர்சனமே படத்திற்குப் பெரிய விளம்பரமாக மாறியது. AI தொழில்நுட்பம் இல்லாமல் மனித உழைப்பால் உருவாக்கப்பட்ட படம் என்பதால், மக்கள் ஆர்வத்துடன் தியேட்டர்களுக்குச் சென்று பார்க்கத் தொடங்கினர்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel