சிறப்புச் செய்தி

‘The waiting is over’... விஜய் சேதுபதியின் பத்தா ஓ.டி.டி. வெளியீடு அறிவிப்பு! எப்போது, எதில் பார்க்கலாம்?

49 minutes ago 10 பார்வைகள்
‘The waiting is over’... விஜய் சேதுபதியின் பத்தா ஓ.டி.டி. வெளியீடு அறிவிப்பு! எப்போது, எதில் பார்க்கலாம்?

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி படங்களைத் தொடர்ந்து பாலாஜி தரணீதரன் - விஜய் சேதுபதி கூட்டணி மீண்டும் இணைந்த படம் ‘பத்தா’.

அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்களிடையே விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

ஒரு ஊரில் தாதாவாக இருக்கும் ஒருவனை (விஜய் சேதுபதி), சிறுவன் ஒருவன் விடுமுறை நாளில் பள்ளி கழிப்பறையில் வைத்து பூட்டிவிடுகிறான்.

எதற்காக சிறுவன் பூட்டினான்? அந்த கழிவறையில் இருந்து பத்தா என்ற ரவுடி எப்படி வெளியே வந்தான், வெளியே வந்து தன்னை உள்ளே வைத்து யார் பூட்டியது என்பதை கண்டுபிடித்தானா என்பதுதான் படம்.

படத்தின் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களை கவர்கிறது. இறுதியில் சிறுவன் தான்தான் கழிவறைக்குள் வைத்து பூட்டினேன் எனும் கூறும் காட்சிகள் எல்லாம் கண்ணீர் வரவழைக்கும்.

விஜய் சேதுபதி, லிஜோமோல், சிறுவன் ப்ரித்வி ராஜ், சிறுமி சஹஸ்ரா ஸ்ரீ என படத்தின் ஒவ்வொரு கதாபாத்திரமும் தங்களின் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். பாலாஜி தரணீதரனின் கதாபாத்திர தேர்வு மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளது.

படத்திற்கு சாப் அபியங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் வரும் ‘செல்லமே மகளே’ டிரெண்டிங் பாடலாகவே மாறிவிட்டது.

அட்லீயின் ஏ ஃபார் ஆப்பிள், ஸ்டார் ஸ்டுடியோ 18, சினி 1 ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்துள்ளன.

படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும், சில காரணங்களால் வசூல்ரீதியாக பெரும் வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் படத்தின் ஓ.டி.டி. வெளியீடு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி படம் நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி. தளத்தில் அக்டோபர் 29ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த வார விடுமுறையில் ஒரு நல்லப் படம் பார்க்க வேண்டும் என நீங்கள் யாராவது விரும்பினால், கண்டிப்பாக ‘பத்தா’-ஐ பார்க்கலாம்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்