தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

‘யாரையும் யாரையும் யாரையும் வாழ்க்கையில் நம்பாதீர்கள்’ - இயக்குநர் செல்வராகவனின் திடீர் பதிவு!

இயக்குநராக மட்டுமல்லாமல், சமீபகாலமாக படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து, தனது நடிப்பாலும் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் இயக்குநர் செல்வராகவன்.

இதனிடையே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பவர் செல்வராகவன். அவ்வப்போது அவர் பதிவிடும் பதிவுகளும் ரசிகர்களிடையே பெரும் கவனம் ஈர்க்கும்.

அந்தவகையில், தற்போது அவர் ஒரு பதிவை வெளியிட்டு ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளார். அப்பதிவில்.,

“யாரையும் யாரையும் யாரையும் வாழ்க்கையில் நம்பாதீர்கள். எப்பொழுது யார் கவிழ்ப்பார்கள் என்று சொல்லவே முடியாது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இப்பதிவால் அவரது குடும்பத்தில் ஏதேனும் பிரச்னையா என இணையவாசிகள் கேள்வி எழுப்பிவருகின்றனர். சமீபகாலமாகவே அவரது மனைவியுடன் பிரச்னை என்பதுபோல தகவல்கள் பரவிவரும் நிலையில் இந்த பதிவு கவனம் ஈர்த்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel