தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

'எல்லாம் தெரிஞ்சவன் தலைவன் ஆகுறதெல்லாம் அந்த காலம்: எல்லாருக்கும் தெரிஞ்சவன் தலைவர் ஆகுறதுதான் இந்த காலம்' - ப்ளடி பாலிடிக்ஸ் டீசரின் பரபரப்பு வசனம்!

தமிழ் சினிமாவில் தற்போதைய ட்ரெண்டிங்காக அரசியல் கதைக் களங்கள் மாறி வரும் நிலையில், நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நடிப்பில் முற்றிலும் ஒரு புதிய அரசியல் அதிரடித் திரைப்படமாக உருவாகியுள்ள 'ப்ளடி பாலிடிக்ஸ்' படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த மாஸ் டீசரை முன்னணி நடிகர் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நேற்று தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குநர் தினா ராகவன் எழுத்து மற்றும் இயக்கத்தில், தென் சென்னையின் அடிமட்ட அரசியல் மற்றும் வார்டு கவுன்சிலர் தேர்தலை மையமாக வைத்து இந்தத் திரைப்படம் மிக யதார்த்தமாக உருவாக்கப்பட்டுள்ளது.

நேற்று வெளியான 107 விநாடிகள் கொண்ட இந்த டீசர், ஆரம்பம் முதலே விறுவிறுப்பான காட்சிகளால் நிரம்பியுள்ளது.

எப்போதும் துடிப்பான சாக்லேட் பாயாக வலம் வந்த கௌதம் ராம் கார்த்திக், இதில் 'இளையா' என்ற கதாபாத்திரத்தில், அரசியல்வாதியாக துடிக்கும் ஒரு ஆக்ரோஷமான எளிய இளைஞனாக முற்றிலும் மாறுபட்ட புதிய மாஸ் அவதாரத்தில் மிரட்டியுள்ளார்.

இந்த டீசரின் ஹைலைட்டாக அமைந்துள்ள ஒரு வசனம் அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.

என்ற பன்ச் வசனம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல மடங்கு எகிற வைத்துள்ளது. இப்படத்திற்கு பிரபல இயக்குனர் ராஜு முருகன் கூர்மையான வசனங்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் கௌதம் கார்த்திக்குடன் இணைந்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான செல்வராகவன் மற்றும் பி. வாசு ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

குறிப்பாக, செல்வராகவன் ஒரு இரக்கமற்ற மூத்த அரசியல் தலைவராக டீசரில் காட்டியுள்ள லுக் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இவர்களுடன் அஞ்சனா நேத்ருன், ரோபி, ஏ. வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

பிரபல தயாரிப்பாளர் கணேஷ் கே. பாபு தனது 'Draft by GKB' நிறுவனம் மூலம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வழங்குகிறார். படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். டீசரின் பின்னணி இசை படத்தின் தீவிரத் தன்மையை அப்படியே கடத்துவதாக உள்ளதென சினிமா விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்.

தற்போது யூடியூபில் ட்ரெண்டிங்கில் உள்ள இந்த டீசர், 'ப்ளடி பாலிடிக்ஸ்' ஒரு தரமான அரசியல் த்ரில்லராக இருக்கும் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது. மேலும் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel