தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

அக்கா அம்பிகா மீது மோசடி புகார் - நடிகை ராதா நேரில் ஆஜராக போலீசார் அழைப்பு!

நடிகையும், தனது அக்காவுமான அம்பிகா தன்னிடம் காசோலை மோசடியில் ஈடுபட்டதாக, நடிகை ராதா அளித்த புகாரில், நாளை மறுநாள் (செப்.14) நேரில் ஆஜராகுமாறு அவருக்கு போலீசார் அழைத்து விடுத்துள்ளனர்.

நடிகையும், தனது அக்காவுமான அம்பிகா மீதும், தனது சகோதரர் மல்லிகார்ஜுனா குஞ்சன் நாயர் மீதும் குற்றம் சாட்டி நடிகை ராதா நேற்று சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்திருந்தார்.

அந்த புகாரில், தான் கையைழுத்திட்டு வைத்திருந்த காசோலைகளை தனது அனுமதியின்றி எடுத்து, அதில் தொகை மற்றும் பிற விவரங்களை நிரப்பி ரூ.46 கோடி பணத்தை மோசடி செய்ய நடிகை அம்பிகா முற்பட்டதாக நடிகை ராதா தெரிவித்திருந்தார்.

இந்த மோசடிக்கு அவரது தம்பி, அம்பிகாவிற்கு துணையாக இருந்ததாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.

மேலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக தன்னை குடும்ப சொத்து பகுதிகளுக்குள் இருவருவம் விடவில்லை எனவும் குற்றம் சாட்டியிருந்தார்.

காவல் ஆணையரிடம் மனு அளித்ததைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்தும் இதுதொடர்பாக பேட்டியளித்திருந்தார்.

நடிகை ராதாவின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு நடிகை அம்பிகா மறுப்பு தெரிவித்திருந்தார். அதாவது தங்களுக்குள் இருக்கும் குடும்ப சொத்துகள் தொடர்பான பிரச்னைகளை சுமூகமாக முடித்துக் கொள்ள, நடிகை ராதாவாகவே முன்வந்து கொடுத்ததுதான் அந்த 5 காசோலைகள் என்று தெரிவித்திருந்தார்.

மேலும் நடிகை ராதாவிற்கு முன்பே, தான் இதுதொடர்பாக கடந்த ஜூலை மாதமே காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்ததாக தெரிவித்தார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel