அசத்தல் அப்டேட்களுடன் மஹிந்திரா தார் OG அறிமுகம் - விலை மற்றும் முழு விவரங்கள்
மஹிந்திரா நிறுவனத்தின் முற்றிலும் புதிய தார் OG மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மஹிந்திரா தார் OG, இந்திய விலை ரூ. 10.32 லட்சம் என தொடங்குகிறது. இந்த கார் மூன்று டிரிம் லெவல்கள் மற்றும் மூன்று என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
புதிய தார் OG வெளிப்புறத்தில் செய்யப்பட்ட மிகப்பெரிய மாற்றம், முழுமையான எல்.இ.டி. ஹெட்லேம்ப்கள் மற்றும் சற்றே தள்ளி அமைக்கப்பட்ட தார் லோகோவுடன் கூடிய புதிய 5-ஸ்லாட் கிரில் ஆகும்.
மஹிந்திரா நிறுவனம் முன்புறம் மற்றும் பின்புறத்தில் புதிய பம்பர்களையும், ராக்ஸ் மாடலில் வழங்கப்படும் சக்கரங்களை போன்ற புதிய 19-இன்ச் ஸ்டார் பேட்டர்ன் அலாய் வீல்களையும் பொருத்தியுள்ளது.
கடந்த ஆண்டு, தார் மாடலில் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட சென்டர் கன்சோல் மற்றும் பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பெரிய கேபின் மேம்பாடுகள் செய்யப்பட்டன. தற்போது இந்த தொகுப்பின் ஒரு பகுதியாக பழுப்பு நிற லெதரெட் இருக்கை மேற்கவர்களும் சேர்க்கப்பட்டுள்ளது.
மஹிந்திரா தார் OG இரண்டு டீசல் மற்றும் ஒரு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களுடன் வழங்கப்படும். இதில் பெரிய டீசல் என்ஜின் மஹிந்திராவின் 2.2-லிட்டர் யூனிட் ஆகும், இது 150bhp பவர் மற்றும் 330Nm டார்க் உற்பத்தி செய்கிறது. இதன் 1.5-லிட்டர் என்ஜின் 117bhp பவர் மற்றும் 300Nm டார்க் உற்பத்தி செய்கிறது.
பெட்ரோல் என்ஜின் 2.0-லிட்டர் யூனிட் ஆகும், இது 174bhp பவர் மற்றும் 300Nm டார்க் உற்பத்தி செய்கிறது. அனைத்து மாடல்களிலும் 6-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் (MT) வழங்கப்படுகிறது. அதே சமயம் பெரிய என்ஜின்களுக்கு 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் (AT) ஆப்ஷனும் கிடைக்கிறது.
இதன் அடிப்படை அமைப்பு முன்பைப் போலவே உள்ளது, ஆனால் இப்போது எலக்ட்ரானிக் லாக்கிங் டிஃபரன்ஷியல், ஃபிரீக்வென்சி டிபென்டன்ட் டாம்பிங், எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல், ஸ்டீயரிங், டிரான்ஸ்மிஷன் மற்றும் த்ராட்டில் ரெஸ்பான்ஸ் ஆகியவற்றின் செயல்பாட்டை மாற்றியமைக்கும் ஒரு புதிய டெரெய்ன் மோட் ஆகியவற்றுடன் வருகிறது.
இந்த கார் AXT, LXT மற்றும் ZXT எனப்படும் புதிய டிரிம் என மூன்று வேரியண்ட்களில் வழங்கப்படும். 1.5-லிட்டர் டீசல் இன்ஜின் AXT மாடலில் மட்டுமே வழங்கப்படுகிறது, மற்ற இரண்டு டிரிம்களிலும் மூன்று பவர்டிரெய்ன் ஆப்ஷன்களும் கிடைக்கின்றன.
1.5-லிட்டர் டீசல் (ரியர் வீல் டிரைவ்)
AXT- ரூ. 10.32 லட்சம்
LXT- ரூ. 12.99 லட்சம்
ZXT - ரூ. 13.99 லட்சம்
2.2-லிட்டர் டீசல்
LXT RWD AT- ரூ. 16.49 லட்சம்
ZXT RWD AT- ரூ. 17.49 லட்சம்
LXT 4WD MT - ரூ. 16.43 லட்சம்
ZXT 4WD MT - ரூ. 17.49 லட்சம்
LXT 4WD AT- ரூ. 18.00 லட்சம்
ZXT 4WD AT- ரூ. 18.99 லட்சம்
2.0-லிட்டர் பெட்ரோல்
LXT RWD AT- ரூ. 14.77 லட்சம்
ZXT RWD AT- ரூ. 16.09 லட்சம்
LXT 4WD MT - ரூ. 15.60 லட்சம்
ZXT 4WD MT - ரூ. 16.50 லட்சம்
LXT 4WD AT- ரூ. 17,23,00 லட்சம்
ZXT 4WD AT - ரூ. 17.75 லட்சம்
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel