ரெயில் தண்டவாளத்தில் சிக்கிய கார்.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பெண் ஓட்டுநர்.. வைரலான வீடியோ
கேரளாவில் பெண் ஓட்டுநர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் மகிந்திரா தார் காரில் பயணம் செய்துள்ளார். அப்போது அவர் ரெயில் தண்டவாளத்தை கடப்பதற்காக தனது வாகனத்தை இயக்கியுள்ளார்.
இதற்கிடையில் சாலையின் ஓரமாக இருந்த பள்ளத்தில், காரின் டயர் சிக்கிக்கொண்டது. இதையடுத்து அந்த பெண் ஓட்டுநர் எவ்வளவோ முயற்சி செய்தும், அவரால் தண்டவாளத்தை கடக்கமுடியாமல் போனது.
அந்த வழித்தடம் வழியாக வந்த மக்கள் கார் ஓட்டுநர் சரியான முறையில் வாகனத்தை இயக்காததே, இந்த விபத்திற்கு காரணம் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து இந்த வழிதடம் வழியாக ரெயில் ஒன்று வருவதாக சிக்னல் வந்தபோது, ரெயில் தண்டவாளத்தில் கார் ஒன்று சிக்கியுள்ளதாக ரெயில் ஓட்டுநருக்கு ஸ்டேஷன் மாஸ்டர் தகவல் கொடுத்தார்.
இதன் காரணமாக ரெயில் தனது முந்தைய ஸ்டேஷனில் இருந்து கிளம்பாமல், அங்கேயே சுமார் அரை மணி நேரம் நின்றது.
இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரெயில் தண்டவாளத்தில் சிக்கியிருந்த காரை மீட்டு, போக்குவரத்தை சீர் செய்தனர்.
வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!
Join WhatsApp Channel