தமிழ்நாடு | நேரலை செய்திகள்
FLASH தற்போதைய முக்கியச் செய்திகள் உடனுக்குடன் அறிய இந்தியன் 7 (INDIAN 7) இணைந்திருங்கள். வாட்ஸ்அப் சேனலில் தொடர்ந்து செய்திகளைப் பெறுக.

'வடமாநில ஆண்களுக்கு வேலை இல்லை!'- பெங்களூரு CEO-வின் அறிவிப்பு வைரல்

உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய 4 மாநிலங்களைச் சேர்ந்த ஆண்களுக்கு மட்டுமே இந்தத் தடை விதிக்கப்படுவதாகவும், அதே மாநிலங்களைச் சேர்ந்த பெண்களுக்கு பணிவாய்ப்பு வழங்குவதில் எந்தத் தடையும் இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

இதுகுறித்து, தலைமைச் செயல் அதிகாரி இந்த நிறுவனத்தில் பணியாற்றிய வடமாநிலத்தைச் சேர்ந்த ஆண் ஊழியர் ஒருவர், சக பெண் ஊழியர்களிடம் தொடர்ந்து தவறாக நடந்துகொண்டதாகவும், எச்சரித்த பிறகும் தனது நடத்தை முறையை மாற்றிக்கொள்ளாததால் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் கார்த்திக் தெரிவித்துள்ளார். தங்கள் நிறுவனம் சிறு குழந்தைகளுக்கும் விளையாட்டுப் பயிற்சிகளை வழங்கி வருவதால், குழந்தைகளுக்கும் நிறுவனத்தில் உள்ள பெண் ஊழியர்களுக்கும் பாதுகாப்பான சூழலை உறுதிசெய்வதே முதன்மையான நோக்கம் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து இணையவாசிகளிடையே இருவேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. ஒருதரப்பினர் தனிநபர் ஒருவரின் தவறான நடத்தைக்காக ஒரு மாநிலத்தையே அல்லது குறிப்பிட்ட பிராந்தியத்தை சேர்ந்த அனைத்து ஆண்களையும் புறக்கணிப்பது இனவாத மற்றும் பிராந்தியப் பாகுபாடு என்று கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மற்றொரு தரப்பினர், பெண் ஊழியர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட இந்த முடிவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தமது இந்த முடிவு பிராந்திய ரீதியிலான முன்னுரிமையே தவிர இனவாதம் அல்ல என்றும், கடுமையான விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புகள் வந்தபோதிலும் பெண் ஊழியர்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பைக் கருதி தமது முடிவில் உறுதியாக இருக்கப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தச் செய்தியைப் பகிரவும்:

வாட்ஸ்அப் சேனலில் உடனுக்குடன் செய்திகளைப் பெறுக!

Join WhatsApp Channel