சிறப்புச் செய்தி

ஐரோப்பிய நாடுகள் கால்பந்து ‘லீக்’ போட்டி- ஸ்பெயின், இங்கிலாந்து வெற்றி

13 hours ago 23 பார்வைகள்
ஐரோப்பிய நாடுகள் கால்பந்து ‘லீக்’ போட்டி- ஸ்பெயின், இங்கிலாந்து வெற்றி

ஐரோப்பிய நாடுகள் (நேஷன்ஸ்) இடையேயான கால்பந்து ‘லீக்’ போட்டி கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று காலை நடந்த ஆட்டம் ஒன்றில் ‘ஏ 3’ பிரிவில் உள்ள இங்கிலாந்து-செக் குடியரசு அணிகள் மோதின.

இதில் இங்கிலாந்து 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி கேப்டன் ஹாரிகேன் 2 கோல் (40 மற்றும் 57-வது நிமிடங்கள்) அடித்தார். செக்குடியரசு வீரர் கவுபல் 27-வது நிமிடத்தில் சேம் சைடு கோல் அடித்தார்.

இங்கிலாந்து அணிபெற்ற 3-வது வெற்றி இதுவாகும். ஒரு ஆட்டத்தில் தோற்றுள்ளது. 9 புள்ளியுடன் அந்த அணி 2-வது இடத்தில் உள்ளது. செக்குடியரசு அணி தொடர்ந்து 4-வது தோல்வியை தழுவியது.

இந்த பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் உலக சாம்பியனான ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் குரோஷியாவை வீழ்த்தியது.

மெரினோ இந்த 2 கோலையும் (61 மற்றும் 88-வது நிமிடம்) அடித்தார். இதன் மூலம் ஸ்பெயின் அணி 4 வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்று கால் இறுதிக்கு தகுதி பெற்றது. குரோஷிய அணி 3-வது தோல்வியை தழுவியது.

மற்ற ஆட்டங்களில் சுவிட்சர்லாந்து 3-0 என்ற கோல் கணக்கில் வடக்கு மசிடோனாவையும், சுலே வேனியா 2-0 என்ற கணக்கில் ஸ்காட்லாந்தையும், பெலாரஸ் 1-0 என்ற கணக்கில் பின்லாந்தையும் தோற்கடித்தன.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்