சிறப்புச் செய்தி

உறுதியானது ‘இந்தியன் 3’ - படப்பணிகள் தொடக்கம்!

11 hours ago 15 பார்வைகள்
உறுதியானது ‘இந்தியன் 3’ - படப்பணிகள் தொடக்கம்!

சங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996ம் ஆண்டு வெளியான படம் ‘இந்தியன்’. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் தொடர்ச்சியாக 2024ம் ஆண்டு வெளியானப் படம் ‘இந்தியன் 2’.

இது கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இரண்டாம் பாகத்தின் தயாரிப்பு பணிகளின்போதே மூன்றாம் பாகத்திற்கான அறிவிப்புகள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் ‘இந்தியன் 3’ படத்திற்கான பின்னணிப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் லைகா புரொடக்ஷன்ஸ் போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

சித்தார்த், காஜல் அகர்வால், பிரியா பவானி சங்கர், பாபி சிம்ஹா மற்றும் எஸ்.ஜே. சூர்யா ஆகியோர் 'இந்தியன் 3' படத்தில் மீண்டும் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .

படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சுபாஸ்கரன் மற்றும் ஜி.கே.எம். தமிழ்குமரன் லைகா புரொடக்ஷன்ஸ் பதாகையின் கீழ் படத்தைத் தயாரிக்கின்றனர் .

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்