சிறப்புச் செய்தி

‘இரண்டு வானம்’ வெளியீடு ஒத்திவைப்பு!

11 hours ago 18 பார்வைகள்
‘இரண்டு வானம்’ வெளியீடு ஒத்திவைப்பு!

ராம் குமார் இயக்கத்தில், விஷ்ணு விஷால், மமிதா பைஜு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘இரண்டு வானம்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.

‘முண்டாசுப்பட்டி’, ‘ராட்சசன்’ படங்களை இயக்கிய ராம் குமாருடன் விஷ்ணு விஷால் மீண்டும் இணையும் படம் ‘இரண்டு வானம்’.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் சார்பில், டி.ஜி. தியாகராஜன் தயாரித்துள்ள இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.

முன்னதாக படம் அக்.23ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இந்நிலையில் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு, படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

ரஜினியின் ஜெயிலர் 2, சூர்யாவின் சீன் உள்ளிட்ட படங்கள் அடுத்த வாரம் வெளியாக உள்ளநிலையில், வசூல் மோதலை தவிர்ப்பதற்காக இப்படம் ஒத்திவைக்கப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்