நெசவை மையமாகக் கொண்ட புதிய காதல் காவியம்.
அறிமுக இயக்குனர் ராஜேந்திர பாலா இப்படத்தை எழுதி இயக்குகிறார். தெலுங்கு திரையுலகின் வளர்ந்து வரும் முன்னணி நடிகர் சுஹாஸ் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இவருடன் நந்து, சஞ்சனா ஏ.கே, தனிகெல்லா பரணி மற்றும் நகைச்சுவை நடிகர் கருணாகரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 'வர்ஷங்கள் போயே' படம் மூலம் பிரபலமான அம்ரித் ராம்நாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
"சில காதல் கதைகள் எழுதப்படுவதில்லை, அவை நெய்யப்படுகின்றன" (Some love stories aren't written. They are woven) என்ற குறிப்புடன் இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. இதன் மூலம், நெசவு மற்றும் பட்டுத் தொழிலை பின்னணியாகக் கொண்ட ஒரு அழகான காதல் கதையாக இப்படம் இருக்கும் என்பதை படக்குழுவினர் உணர்த்தியுள்ளனர்.
கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சுரேஷ் செல்வராஜன் கலை இயக்குனராகப் பணியாற்றுகிறார். கல்யாண் சுப்பிரமணியன் மற்றும் கல் ராமன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் பாடல்களை தமிழில் மோகன் ராஜன் எழுதியுள்ளார்.
வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் 'ஹைட் & சில்க்' திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தற்போதே அதிகரித்துள்ளது.