சிறப்புச் செய்தி

ஏஐ பயன்பாடு அதிகரிப்பு காரணமாக சோஹோ ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு வழங்கப்படாது - ஸ்ரீதர் வேம்பு

10 hours ago 22 பார்வைகள்
ஏஐ பயன்பாடு அதிகரிப்பு காரணமாக சோஹோ ஊழியர்களுக்கு இந்த ஆண்டு சம்பள உயர்வு  வழங்கப்படாது -  ஸ்ரீதர் வேம்பு

செயற்கை நுண்ணறிவு ஏஐ பயன்பாடு அதிகரித்துள்ளதான் காரணமாகவும், தரவு மையங்களுக்கு தேவையான சர்வர்விலை நான்கு மடங்கு உயர்ந்துள்ளதாலும் இந்த இந்த ஆண்டு (2026) ஸோஹோ நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு வழக்கமான ஆண்டு சம்பள உயர்வு வழங்கப்படாது என அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு அறிவித்துள்ளார்.

இவற்றோடு பிற காரணங்களையும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். அதில் உலகளவில் ஏற்பட்டுளள அரசியல் பதற்றநிலை மற்றும் மென்பொருள் துறை சார்ந்த எதிர்கால நிச்சயமற்ற தன்மை ஆகியவையும் காரணமாக குறிப்பிட்டுள்ளார்

நிறுவனத்தில் ஆள்குறைப்பு செய்வதைத் தவிர்க்கவே இந்த கடுமையான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். மேலும், கடந்த 18 மாதங்களாக நிறுவனத்தில் புதிய ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.

மேலும் மென்பொருள் துறை வேலைவாய்ப்புகளுக்கு வரும் காலம் பெரும் சவாலாக இருக்கும் என்றும், தங்களது சந்தைப்படுத்தல் செலவுகளைக் குறைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்வதாகவும், ஊழியர்கள் இதனைப் புரிந்துகொள்வார்கள் என நம்புவதாகவும் அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்

நாங்கள் எங்களைப் புதுப்பித்துக் கொள்ளும் பணியில் இருக்கிறோம். எங்களின் இந்தப் புதுப்பித்தல் எவ்வாறு பலனளித்துள்ளது என்பதை அடுத்த 3-5 ஆண்டுகள் தீர்மானிக்கும் என்று தெரிவித்துள்ளார்

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்