வரும் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் வகையில் புதுச்சேரி மாநில அரசு பொதுமக்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பயன்படும் வகையில் சுமார் ரூ.700 மதிப்பிலான அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாகவோ அல்லது சிறப்புச் சலுகை முறையிலோ வழங்கப்படவுள்ளன.
இந்தச் சிறப்பு மளிகைத் தொகுப்பில் சமையலுக்கு தேவையாமான 2 லிட்டர் சமையல் எண்ணெய், 2 கிலோ சர்க்கரை, 1 கிலோ கடலைப்பருப்பு, அரை கிலோ ரவை மற்றும் அரை கிலோ மைதா ஆகியவை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளித் திருநாளில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பங்களின் பொருளாதாரச் சுமையைக் குறைக்கும் நோக்கில் புதுச்சேரி அரசின் இந்தத் திட்டம் பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகள் மற்றும் கூட்டுறவு அங்காடிகள் மூலமாகப் பொருட்களை விநியோகிக்கும் தேதிகள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.