சிறப்புச் செய்தி

சி.ஜே.பி. மற்றும் எதிர்க்கட்சிகளின் நோக்கமே ஆட்சி மாற்றம்தான்.., ராஜ்நாத் சிங் பதிலடி

11 hours ago 20 பார்வைகள்
சி.ஜே.பி. மற்றும் எதிர்க்கட்சிகளின் நோக்கமே ஆட்சி மாற்றம்தான்.., ராஜ்நாத் சிங் பதிலடி

வாக்காளர் பட்டியலில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொள்ள சிறப்பு தீவிர திருத்தபணியில் (SIR) முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் கட்சி வெளிப்படையாக குற்றம்சாட்டி போராட்டம் நடத்தி வருகிறது. இதற்கு பொறுப்பேற்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், பதவி விலக வேண்டும் என்று போராடி வருகிறது.

இதற்கிடையே கரப்பான்பூச்சி ஜனதா கட்சி கடந்த 10-ந்தேதி ஞானேஷ்குமாருக்கு எதிராக போராட்டத்தை கையில் எடுத்தது. ஆனால், ஜந்தர் மந்தரில் சிஜேபி-யினர் கூடுவதை போலீசார் தடுத்து நிறுத்தினர். முக்கிய தலைவர்களை கைது செய்தனர்.

இதை எதிர்த்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். சிஜேபி போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள், போராட்ட தலைவர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதில் ஒருவர் பிரசாந்த் பூஷன்.

இவர்கள் நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது அபிஜீத் தீப்கே, AISA-யின் நேஹா போரா உள்ளிட்டோர் இருந்தவர். அப்போது பிராந்த் பூஷன் பேசுகையில் "அரசாங்கம், எதிர்க்கட்சியினர் ஆட்சியை மாற்ற விரும்புகிறார்கள் என்று குற்றம் சாட்டுகிறது. தேர்தல்கள் முறையாக நடைபெறுவதை உறுதி செய்யவே நாங்கள் தற்போது போராடிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இத்தகைய கொடூரங்கள் தொடருமானால், நிச்சயமாக ஆட்சி மாற்றம் ஏற்படும். ஆம், நாங்கள் அனைவரும் ஆட்சி மாற்றத்தையே விரும்புகிறோம்.

இதில் என்ன தவறு? பாஜக ஆட்சியை மாற்றுவதற்கான பல முன்னெடுப்புகளை முன்னின்று நடத்தியதே? இப்போது அவர்கள் ஆட்சியை மாற்ற சதி நடப்பதாகக் கூறுகிறார்கள்.

அதனால்தான், இது இப்போது ஒரு சர்வாதிகார அரசாங்கத்திற்கு எதிரான, ஆட்சி மாற்றத்திற்கான உண்மையான போராட்டமாக மாறியுள்ளது. ஜனநாயகத்தை நசுக்கிக்கொண்டிருக்கும் ஒரு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் இது.

ஜனநாயகத்தில் அரசாங்கத்திற்கு எதிராக அதிருப்தியை பரப்புவது குற்றமல்ல. தற்போதைய போராட்டம் உண்மையிலேயே ஒரு ஆட்சி மாற்றத்திற்கான போராட்டம்" என்றார்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராஜ்நாத் சிங் கூறியதவாது:-

அவர்கள் (போராட்டக் குழுக்கள்) நாட்டின் இளைஞர்களைக் குழப்ப அரசியலில் பகடைக்காய்களாக மாற்ற முயன்றுள்ளனர். வங்கதேசத்தில் நிகழ்ந்தது போன்றதொரு அரசு மாற்றத்தை அரங்கேற்றுவதே அவர்களின் நோக்கமாக உள்ளது.

உண்மையில், அவர்களில் ஒருவர் செய்தியாளர் சந்திப்பில், இந்த ஆட்சி மாற்றத்திற்குத் தாங்கள் வங்கதேசத்திலிருந்து ஊக்கம் பெற்றதாக வெளிப்படையாகக் கூறினார். மற்றொருவரோ, அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டும் என்று துணிச்சலாக அழைப்பு விடுத்தார். இது அவர்களின் ஒரே நோக்கத்தைத் தெளிவாகக் காட்டுகிறது.

ராகுல் காந்தியும் அவரது சகாக்களும் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். ஜனநாயகம் என்பது குழப்பத்தை விதைப்பதற்கோ, அரசியலமைப்பு சார்ந்த நிறுவனங்களின் நம்பகத்தன்மையைக் குலைப்பதற்கோ அல்லது இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்குத் தடையாக இருப்பதற்கோ வழங்கப்பட்ட உரிமம் அல்ல.

இவ்வாறு ராகுல் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்