சிறப்புச் செய்தி

தாம்பரம்-விழுப்புரம் மெமு ரெயில் நாளை பகுதி ரத்து

15 hours ago 17 பார்வைகள்
தாம்பரம்-விழுப்புரம் மெமு ரெயில் நாளை பகுதி ரத்து

சென்னை ரெயில்வே கோட்டத்தில் உள்ள முண்டியம்பாக்கம் பணிமனையில் தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் காரணமாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) தாம்பரத்தில் இருந்து காலை 9.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்ல வேண்டிய மெமு பயணிகள் ரெயில் விக்கிரவாண்டி வரை இயக்கப்படும்.

விழுப்புரத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு புறப்பட வேண்டிய மெமு பயணிகள் ரெயில் அதற்கு பதிலாக விக்கிரவாண்டி நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.45 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு வந்து சேரும்.

புதுச்சேரியில் இருந்து பிற்பகல் 12.45 மணிக்கு புறப்பட்டு தெலுங்கானா மாநிலம் கச்சிக்குடாவுக்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை பிற்பகல் 1.45 மணிக்கு புறப்பட்டு செல்லும் என சென்னை ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்