சிறப்புச் செய்தி

லண்டனில் இந்திய மாணவர்கள் போராட்டம்: அரசு ஆதரவாளர்கள் எதிர்-போராட்டத்தால் பரபரப்பு!

14 hours ago 15 பார்வைகள்
லண்டனில் இந்திய மாணவர்கள் போராட்டம்: அரசு ஆதரவாளர்கள் எதிர்-போராட்டத்தால் பரபரப்பு!

இந்த வார தொடக்கத்தில் லண்டனில் உள்ள 'இந்தியா ஹவுஸ்' முன்பாக நடைபெற்ற "அவசரகால போராட்டத்தைத்" தொடர்ந்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டம் காக்ரோச் ஜனதா கட்சியின் கோரிக்கைகளை வலுப்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் கியானேஷ் குமார் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். இந்தியாவில் தேர்தல் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்த முறையைரத்து செய்ய வேண்டும் என்பது தான் மாணவர்களின் போராட்டத்திற்கான காரணமாக கருதப்படுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட இரு குழுக்களும் இந்திய தேசியக் கொடியை ஏந்தியவாறு முழக்கங்களை எழுப்பினர். இவர்களை பிரிக்க தூதரக படிக்கட்டுகளுக்கு இடையே லண்டன் மாநகர காவல் துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.

'ஆசாதி' (சுதந்திரம்) மற்றும் 'சாரே ஜஹான் ஸே அச்சா' போன்ற முழக்கங்களை மாணவர்கள் குழு எழுப்பினர்.

பிரதமர் நரேந்திர மோடியின் பெரிய கட்-அவுட்களை ஏந்தி, 'பாரத் மாதா கீ ஜே' மற்றும் 'மோடி, மோடி' என எதிர் குழு சார்பாக அரசு ஆதரவாளர்கள் முழக்கமிட்டனர்.

"வாக்குகளை அழிப்பதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம். காவல்துறை வன்முறையையும் சகித்துக் கொள்ள முடியாது. இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்கவே நாங்கள் இங்கு கூடியுள்ளோம்," என்று மனவர்கள்கள் அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும், அங்கிருந்த பேச்சாளர்கள் "ஜே பீம்" மற்றும் "ஷேம்" போன்ற முழக்கங்களை எழுப்புமாறு கூட்டத்தினரை கேட்டுக்கொண்டனர். இதற்குப் பதிலடியாக, அரசு ஆதரவுக் குழுவினரும் ஒலிபெருக்கிகள் மூலம் "ஷேம்" என்று முழக்கமிட்டனர்.

இந்தியாவில் வலுவான வணிகத் தொடர்புகளைக் கொண்ட லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் ராகுல் காலே கூறுகையில், "பிரதமர் நரேந்திர மோடியின் கீழ், இங்கிலாந்துடனான வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மூலம் இந்தியா உலகளாவிய வர்த்தகத்தை விரிவுபடுத்தியுள்ளது.

லண்டனில் காரணமில்லாமல் நடத்தப்படும் இத்தகைய போராட்டங்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைக் கெடுத்து, தேவையற்ற பீதியை உருவாக்குகின்றன என்பதை இந்த போராட்டக்காரர்கள் புரிந்து கொள்ள வேண்டும்," என்றார்.

இங்கிலாந்தில் உள்ள இந்திய வம்சாவளி அமைப்பின் நிறுவனர்-இயக்குனர் ஹிர்தேஷ் குப்தா பேசுகையில், "இந்தியாவின் முன்னேற்றம் மற்றும் செழுமைக்காக அயராது உழைத்து வரும் பிரதமர் நரேந்திர மோடி மீது எங்களுக்கு இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையை வெளிப்படுத்தவே நாங்கள் இங்கு கூடியுள்ளோம்," என்று குறிப்பிட்டார்.

லண்டனில் வரும் நாட்களிலும் இது போன்ற தொடர் போராட்டங்களும், அதற்கு எதிரான எதிர்-போராட்டங்களும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்