சிறப்புச் செய்தி

முதலமைச்சர் பற்றி அவதூறு பேச்சு: திமுக பெண் கவுன்சிலர்- பகுதி செயலாளர் மீது வழக்கு- போலீசார் நடவடிக்கை

18 hours ago 17 பார்வைகள்
முதலமைச்சர் பற்றி அவதூறு பேச்சு: திமுக பெண் கவுன்சிலர்- பகுதி செயலாளர் மீது வழக்கு- போலீசார் நடவடிக்கை

சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில், சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது.

துறைமுகம் பகுதி செயலாளர் முரளி ஏற்பாடு செய்திருந்த இந்த விழாவில் தி.மு.க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் பேசிய மாவட்ட மகளிர் அணி அமைப்பாளரும் வில்லிவாக்கம் பகுதி தி.மு.க 95வது வட்ட கவுன்சிலருமான சுதா தீனதயாளன் தமிழக முதலமைச்சர் விஜய் பற்றி தகாத வார்த்தைகளால் அவதூறாக பேசியுள்ளார்.

இது தொடர்பாக துறைமுகம் பகுதி த.வெ.க. செயலாளர் உதயகுமார் எஸ்பிளனேடு போலீசில் புகார் அளித்தார். அதில் இரு தரப்பினர்களிடையே பிரச்சனை உண்டாக்கும் நோக்கத்திலும், பொது மக்களிடையே பதற்றம் ஏற்படுத்தும் விதத்திலும் பேசியுள்ள திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் மற்றும் விழாவை ஏற்பாடு செய்த முரளி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி இருந்தார். இதன் பேரில் போலீசார் இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்