சிறப்புச் செய்தி

ஆசிய பாராம்பிலிக்: டேபிள் டென்னிசில் வெண்கலம் வென்ற பேபி சஹானா ரவிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

14 hours ago 15 பார்வைகள்
ஆசிய பாராம்பிலிக்: டேபிள் டென்னிசில் வெண்கலம் வென்ற பேபி சஹானா ரவிக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து!

முதலமைச்சர் விஜய் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஜப்பானில் நடைபெற்றுவரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பெண்கள் கிளாஸ் 9 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள வீராங்கனை பேபி சஹானா ரவி அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுகளையும், நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ. 30 இலட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். வீராங்கனை பேபி சஹானா ரவி அவர்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பால் இந்த சாதனையைப் படைத்துள்ளார். அவரது வெற்றி தமிழ்நாட்டின் இளம் பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய உத்வேகத்தை அளிக்கும்.

அவர், எதிர்காலத்திலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க எனது வாழ்த்துகள்! என கூறியுள்ளார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்