சிறப்புச் செய்தி

சென்னையில் விடிய விடிய கனமழை: எந்த பகுதியில் அதிகபட்ச மழை பொழிவு தெரியுமா?

18 hours ago 17 பார்வைகள்
சென்னையில் விடிய விடிய கனமழை: எந்த பகுதியில் அதிகபட்ச மழை பொழிவு தெரியுமா?

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனிடையே வங்கக்கடலில் அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுப்பகுதிகள் உருவாக இருப்பதால் தமிழகம், புதுச்சேரியில் 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

அதன்படி, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று மாலை முதல் விடிய விடிய கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. அதனை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதனிடையே, தொடர் கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளான பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

வடபழனி 13.5 செ.மீ, சைதாப்பேட்டை 12.7 செ.மீ, மீனம்பாக்கம் 12 செ.மீ, மடிப்பாக்கம் 11.6 செ.மீ, மதுரவாயல் 11.4 செ.மீ, வளசரவாக்கம் 11.3செ.மீ, நெற்குன்றம் 11செ.மீ, நுங்கம்பாக்கம் 10 செ.மீ, அடையாறு 10 செ.மீ

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்