சிறப்புச் செய்தி

சென்னையில் ஒரே நேரத்தில் அதிகனமழை பெய்தால் சமாளிக்க தயார்- மாநகராட்சி கமிஷனர் சமீரன்

12 hours ago 18 பார்வைகள்
சென்னையில் ஒரே நேரத்தில்
அதிகனமழை பெய்தால் சமாளிக்க தயார்- மாநகராட்சி கமிஷனர் சமீரன்

சென்னையில் மழை பாதிப்பு குறித்து மாநகராட்சி கமிஷனர் சமீரன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

சூப்பர் எலினோவால் இந்த வருடம் வெப்பநிலை உயர்ந்தது. இது வரலாற்றில் இல்லாத ஒன்று.

இந்த சூழ்நிலையில் வடகிழக்கு பருவமழை நமக்கு சாதகமாக இருக்கிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மூலம் அதீத மழை வரலாம். இந்த சூழ்நிலையை எதிர்கொள்ள மாநில பேரிடர் துறையில் இருந்து அறிவுரைகள் வந்துள்ளன.

முதலமைச்சர் தலைமையில் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாநில மற்றும் தேசிய பேரிடர் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

தொடர்ந்து மழை பெய்து வருவதை கண்காணித்து வருகிறோம். தொடர்ந்து 14 மணி நேரம் அதி கனமழை பெய்யும்போது சவாலாக இருக்கும். அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். ஆனால் பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

இதுபோன்ற நேரத்தில் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும். ஒரே நேரத்தில் குறிப்பிட்ட பகுதியில் அதிக மழை பெய்தால் அதனை எதிர்கொள்வது என்பது பற்றியும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 5 மணி வரை மழை தொடர் பாக 1212 புகார்கள் வந்துள்ளன. மழைநீர் தேங்கியது, தெருவிளக்கு, மரம் விழுந்தது குறித்து வந்த புகாரைத் தொடர்ந்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மரங்கள் அகற்றப்பட்டு போக்குவரத்து சீரானது. தெருவிளக்கு சீர்செய்யும் பணி நடைபெற்று வருகிறது. புகார்கள் குறித்த பணிகளை நிறைவு செய்து அதை புகைப்படம் எடுத்து ஊழியர்கள் அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்