சிறப்புச் செய்தி

கனமழை: திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

2 hours ago 15 பார்வைகள்
கனமழை: திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கனமழை காரணமாக தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 22) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதனிடையே தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று காலை உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி அதே இடத்தில் நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் திருச்சி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாமக்கல், விழுப்புரம், திருப்பூர், கரூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் பல இடங்களில் விடிய விடிய கனமழை பெய்து வரும் சூழலில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

மறுபுறம் கன்னியாகுமரி - கேரளா எல்லை பகுதியில் உள்ள நெய்யாற்றின்கரை - பாறசாலை இடையே ரெயில் பாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டதால் ரெயில்கள் தாமதமாககியுள்ளன.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்