வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 69 நபர்களுக்கு முதலமைச்சர் விஜய் பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
வேளாண்மை-உழவர் நலத் துறையின் திட்டங்களைக் கள அளவில் செயல்படுத்திவரும் உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களில் அவ்வப்போது ஏற்படும் காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 26 உதவி வேளாண்மை அலுவலர்கள், 43 உதவி தோட்டக்கலை அலுவலர்கள் என மொத்தம் 69 நபர்களுக்கு முதலமைச்சர் விஜய் பணிநியமன ஆணைகளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
2024-2025-ம் ஆண்டிற்கான நிதி மேலாண்மைக்கான முதல் பரிசை தருமபுரி மாவட்ட கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட் நிறுவனத்திற்கும், 2024-2025ஆம் ஆண்டிற்கான சமூகப் பொறுப்பிற்கான விருதை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட் ஆண்டிற்கான நிறுவனத்திற்கும், 2025-2026 நிதி மேலாண்மைக்கான முதல் பரிசை சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட் நிறுவனத்திற்கும்,
சிறந்த செயல்திறனுக்கான சர்க்கரை ஆலைக்கான விருதை கள்ளக்குறிச்சி-II கூட்டுறவு சர்க்கரை ஆலை லிமிடெட் நிறுவனத்திற்கும் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் கூட்டமைப்பு வழங்கியுள்ளது. மேற்குறிப்பிட்ட நான்கு கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் செயலாட்சியர்கள், முதலமைச்சரிடம் விருதுகளைக் காண்பித்து வாழ்த்துப் பெற்றனர்.