சிறப்புச் செய்தி

எம்பாப்பே உடனான ஒப்பந்தங்களை முறித்துக் கொண்ட சீன நிறுவனங்கள்: காரணம் என்ன?

1 hour ago 10 பார்வைகள்
எம்பாப்பே உடனான ஒப்பந்தங்களை முறித்துக் கொண்ட சீன நிறுவனங்கள்: காரணம் என்ன?

பிரான்ஸ் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர் எம்பாப்வே. இவர் உலகின் தலைசிறந்த கால்பந்து வீரராக திகழ்ந்து வருகிறார். பிரான்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளார். உலகின் பல்வேறு நிறுவனங்கள், அவர்களது தயாரிப்புகளை பிரபலப்படுத்த எம்பாப்பேவை ஒப்பந்தம் செய்து வருகின்றன. அதன் அடிப்படையில் சீனாவில் பல நிறுவனங்கள் எம்பாப்வே உடன் ஒப்பந்தம் செய்துள்ளன.

பானம் உற்பத்தி செய்யும் டாங்பெங் (Dongpeng), மிகப்பெரிய பால் நிறுவனம் மெங்நியு (Mengniu), பாலாடைக்கட்டி நிறுவனம் மில்கிரவுண்ட் உள்ளிட்டவை எம்பாப்பே உடன் ஒப்பந்தம் செய்திருந்தது.

இதற்கிடையே, வீடியோ ஒன்றில் எம்பாப்வே கம்யூனிஸ்ட் தலைவரான மா சேதுங்கை சர்வாதிகாரி என்று குறிப்பிட்டதாக தெரிகிறது. இதனால் இந்த மூன்று நாடுகளும் எம்பாப்பே உடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளனர்.

தேசிய உணர்வுக்கு எதிரான எந்தவொரு வார்த்தைகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் எதிரானவர்கள் என அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்