சிறப்புச் செய்தி

சென்னை சென்ட்ரல்-போத்தனூர், தாம்பரம்-நாகர்கோவில் தீபாவளி சிறப்பு ரெயில்: 6-ந்தேதி இயக்கப்படுகிறது

57 minutes ago 10 பார்வைகள்
சென்னை சென்ட்ரல்-போத்தனூர், தாம்பரம்-நாகர்கோவில் தீபாவளி சிறப்பு ரெயில்: 6-ந்தேதி இயக்கப்படுகிறது

தீபாவளி கூட்ட நெரிசலை குறைப்பதற்காக தெற்கு ரெயில்வே 2 சிறப்பு ரெயில்களை புதிதாக அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல்- போத்தனூர் சிறப்பு ரெயில் (எண்.06023) வருகிற 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11.55 மணிக்கு சென்ட்ரலில் இருந்து புறப்படுகிறது. இந்த ரெயில் மறுநாள் காலை 9.15 மணிக்கு போத்தனூர் சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் (எண். 06024) போத்தனூரில் இருந்து 9-ந்தேதி இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.35 மணிக்கு சென்ட்ரல் வந்தடையும்.

இந்த ரெயில் பெரம்பூர், திருவள்ளூர், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செல்கிறது.

இதே போல தாம்பரத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரெயில் விடப்பட்டுள்ளது. இந்த ரெயில் (எண்.06153) தாம்பரத்தில் 6-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நாகர்கோவிலுக்கு 3.30 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில் (எண்.06154) சிறப்பு ரெயில் நாகர்கோவிலில் 9-ந்தேதி (திங்கட்கிழமை) இரவு 9 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.30 மணிக்கு தாம்பரம் வந்து சேருகிறது. இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, வள்ளியூர் வழியாக இயக்கப்படுகிறது.

சிறப்பு ரெயில்களுக்கான முன்பதிவு நாளை தொடங்குகிறது.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்