இந்திய தேர்தல் ஆணையத்தால் வாக்காளர் பட்டியல்களில் மேற்கொள்ளப்பட்ட சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் நடந்ததாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராக இந்தியா கூட்டணி நவம்பர் 1ம் தேதியன்று “சலோ டெல்லி ராம்லீலா பேரணி”யை முன்னெடுக்கிறது.
இந்நிலையில் இந்த பேரணியில் கலந்துகொள்ளுமாறு மக்களுக்கு, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்.,
வணக்கம்,
ஜனநாயகத்தைக் காக்கவும், வாக்குத் திருட்டைத் தடுக்கவும், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், டெல்லி ராம்லீலா மைதானத்திற்குச் செல்வோம்.
இது எந்தவொரு அரசியல் கட்சிக்கான பேரணியும் அல்ல; இது இந்தியாவின் ஆன்மாவிற்கான பேரணி.
நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் ஞானேஷ் குமார் ஆகியோரின் செயல்பாடுகளால் அதிருப்தியில் இருப்பவர்கள் அனைவரும், ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் பாதுகாக்க விரும்பும் அனைவரும் வாருங்கள்.
இது ஒரு பொதுவான போராட்டம் - நாட்டிற்கான போராட்டம்.
காவல்துறையைப் பற்றியோ, தடியடியைப் பற்றியோ கவலைப்படாதீர்கள்; இத்தகைய அராஜகச் செயல்களில் ஈடுபடுவதற்கான துணிச்சல் பாஜகவிற்கு இருக்காது.
எங்களுடன் இணைந்து வாருங்கள். அரசியலமைப்பைப் பாதுகாக்கவும், இந்திய தேசத்தைக் காக்கவும் நாம் அனைவரும் ஒன்றிணைந்து நடப்போம்.
எந்த அச்சமும் தேவையில்லை.
அனைத்து மாணவர் அமைப்புகளையும் கேட்டுக்கொள்கிறேன். உங்கள் அரசியல் சார்பு எதுவாக இருந்தாலும் சரி, இந்தியா ஆபத்தில் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், உங்களின் கருத்துச் சுதந்திரம், சிந்தனைகள் மற்றும் பார்வைகள் தாக்குதலுக்கு உள்ளாவதாக நீங்கள் கருதினால், எங்களுடன் இணையுங்கள்.
இது ஒரு மிகச்சிறப்பான பேரணியாக அமையும்; இது இந்த நாட்டின் ஆன்மாவிற்கான பேரணி.
உங்கள் அனைவரையும் அங்கு சந்திப்பேன் என்று நம்புகிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.