சிறப்புச் செய்தி

40 ரிசார்ட்டுகள், ரூ.1.8 கோடி வாடகை: ராஜஸ்தான் ஐஏஎஸ்-ஐபிஎஸ் தம்பதிகளிடம் ஊழல் பிரிவு அதிகாரிகள் விசாரணை

1 hour ago 8 பார்வைகள்
40 ரிசார்ட்டுகள், ரூ.1.8 கோடி வாடகை: ராஜஸ்தான் ஐஏஎஸ்-ஐபிஎஸ் தம்பதிகளிடம் ஊழல் பிரிவு அதிகாரிகள் விசாரணை

ராஜஸ்தானை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான ஷிகர் அகர்வால் மாவட்ட ஆட்சியராகவும், மாநில மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராகவும் மற்றும் கூடுதல் தலைமை செயலாளர் உள்ளிட்ட பல உயர் நிர்வாக பதவிகளையும் வகித்துள்ளார்.

இவரது மனைவியான பிரஷாகா மாத்தூர் மூத்த ஐபிஎஸ் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார்.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மற்றும் புஜ்தா ஆகிய பகுதிகளில் 2026 மார்ச் மாதத்தில் 20 ரிசார்ட்டுகளை அகர்வாலும் அவரது மனையும் இணைந்து சுமார் 15 லட்சம் ரூபாய்க்கு வாங்கியுள்ளனர்.

இதையடுத்து அல்வார் மாவட்டத்தில் உள்ள அனந்தா ரிசார்ட் நிறுவனத்திடம் இருந்து 8 வில்லாக்களை அவர்கள் பெயரில் சுமார் ரூபாய் 15 லட்சம் முதல் 16.5 லட்சம் வரை செலுத்தி வாங்கியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து 8 வில்லாக்கள் அவர்களின் இரண்டு மகன்களின் பெயரில், ஒரு வில்லா சுமார் 15 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்பட்டுள்ளது.

மேலும், அகர்வாலின் மாமனார் மற்றும் மாமியார் பெயரில் வாங்கப்பட்ட வில்லாக்கள் ஒவ்வொன்றும் சுமார் 16.5 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளது. இந்த மொத்த வில்லாக்களின் மதிப்பு சுமார் 5.52 கோடி ரூபாயாக உள்ளது.

இந்த காலகட்டத்தில் அகர்வால் தொழில்துறை கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றினார்.

அப்போது அவர் நிறுவனத்திடம் இருந்து ரூ.6.16 கோடிக்கு வாங்கிய 40 வில்லாக்களை, பின்னர் அதே நிறுவனத்திடம் குத்தகைக்கு விட்டு, அதன்மூலம் ஆண்டுக்கு ரூபாய் 1.8 கோடி வருமானம் ஈட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து அகர்வால் தனது பதவியை தவறாக பயன்படுத்தி அனந்தா ரிசார்ட் நிறுவனத்திற்கு சலுகைகளை வழங்கி, ரிசார்ட் கட்டுமான நிபந்தனைகளில் தளர்வுகள் அளித்து, கட்டாய சான்றிதழ்களை முறையாக சரிபார்க்காமல் ஒப்புதல் வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து தொழில்துறையிடம் இருந்து பெறப்பட்ட அறிக்கை மற்றும் ரகசிய தகவல் மூலங்களில் இருந்து திரட்டப்பட்ட தகவல்கள் ஆகியவற்றை ஆய்வு செய்த ராஜஸ்தான் ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Advertisement
வாட்ஸ்அப் சேனலில் உடனடி செய்திகள்! முக்கிய செய்திகள் உங்கள் போனுக்கு நேரடியாக வரும்.
இணையுங்கள்