பெண்களின் கனவுகளுக்குச் சிறகளித்து, சுயசார்புடன் பொருளாதாரத்தில் உயர வழிவகுக்கும் கூட்டுறவுத்துறை ‘சிங்கப்பெண் கடன்’ திட்டத்தில் சுயதொழில் தொடங்க இருப்பதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் அறிவித்துள்ளார்.
பெண்களின் பொருளாதார தற்சார்பை உறுதி செய்யவும், அவர்களைத் தொழில் முனைவோராக உயர்த்தவும் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை சார்பில் ‘சிங்கப்பெண் கடன்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டத்தின் மூலம் மகளிர் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள், கைம்பெண்கள் மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், தொழில் முனைவோர்கள், பணிபுரியும் மகளிர்கள் ஆகியோர் கடனுதவி பெற்று பயனடையலாம்.
அவ்வாறு நடப்பாண்டில் நவம்பர் 2026 வரை 41,369 பயனாளிகளுக்கு ரூ.3,428.49 கோடி அளவில் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.
கந்துவட்டிப் பிடியிலிருந்து மக்களை மீட்டு, பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றன.
புதிய சுயதொழில் தொடங்க விரும்புவோரும், ஏற்கனவே செய்து வரும் தொழிலை விரிவுபடுத்த விரும்பும் மகளிர்கள் தங்களுக்கு அருகிலுள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களை நேரில் அணுகி கடனுதவி பெற்றுப் பயன்பெறுமாறு கூட்டுறவுத்துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
மேலும், இத்திட்டம் தொடர்பான விவரங்கள் மற்றும் தேவையான உதவிகளைப் பெற 98840 00845 என்ற வாட்ஸ்அப் உதவி எண்ணைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.