ஆந்திரா ஓங்கோல் அருகே முரசு புயல் கரையைக் கடந்தது. முரசு புயல் கரையை கடந்தாலும் அதன் தாக்கத்தால் நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, 8 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, செங்கல்பட்டு, கடலூர், மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இன்று மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.